சிவாஜி தயாரித்த முதல் படம்! வித்தியாசமான முயற்சி மாபெரும் ஹிட்!

0
295
#image_title

1964 ஆம் ஆண்டு தாதா மிராசி இயக்கத்தில் வெளிவந்த படம் புதிய பறவை. சிவாஜி புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்த முதல் தமிழ் திரைப்படமாகும்

இதில் சிவாஜி கணேசன், சவுகார் ஜானகி எம் ஆர் ராதா, சரோஜா தேவி ஆகியோர் நடித்த ஒரு திரில்லர் படம் என்று சொல்லலாம்.

 

ஒலிப்பதிவு ஆல்பம் மற்றும் பின்னணி இசையை விஸ்வநாதன்-ராமமூர்த்தி இருவரும் இசையமைத்துள்ளனர் , பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதியுள்ளார் .

 

கோபால் என்பவர் ஒரு மிகப்பெரிய பணக்கார தொழிலதிபர். வெளியூர் பயணத்தின் பொழுது உல்லாச கப்பலில் வந்த லதா என்பவரின் மீது இவருக்கு காதல் ஏற்படுகிறது. லதா தனது தந்தையுடன் பயணம் செய்கிறார். அப்பொழுது கோபால் இருவரையும் தன்னுடைய மாளிகைக்கு அழைக்கிறார். இருவரும் சம்மதம் தெரிவித்து மாளிகைக்கு செல்கின்றனர்.

 

ரயிலின் தண்டவாளத்தை பார்க்கும் பொழுதெல்லாம் கோபாலுக்கு ஒருவித பதற்றம் ஏற்படுகிறது. இதை பார்த்த லதா ஏன் என்று கேட்க தனது முதல் மனைவியை காரணம் என்று அவர் சொல்கிறார்.

 

அப்பொழுது முதல் மனைவி சித்ரா ஒரு மிகப்பெரிய பாடகிஅவரின் சகோதரர் மூலம் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். தினமும் சித்ரா குடித்துவிட்டு வருவார். அதனால் விரக்தி அடைந்த நான் சித்ராவை அறைந்துவிட்டேன். அடுத்த நாள் தண்டவாளத்தில் சித்ரா விபத்தில் சிக்கி இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. என கோபால் தனது முதல் மனைவியின் கதையை சொல்லி முடிக்கிறார். இதனால் லதா ஆறுதல் சொல்லி காதல் வளர்கிறது.

 

லதாவுக்கும் கோபாலுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கும் பொழுது, நான்தான் சித்ரா என்று தனது அண்ணன் ரங்கனுடன் அங்கு வந்து சேர்கிறார் ஒருவர். நிச்சயதார்த்தம் நின்று விடுகிறது. பின் சித்ரா யார் ?எப்படி வந்தார் என்பதை கண்டுபிடித்து லதாவுடன் கோபால் சேருவது தான் கதை.

 

இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் மிகவும் இனிமையானவை. இன்னும் கேட்க தூண்டும் அளவிற்கு புதுமையாகவும் இருக்கும்.

 

இந்த அனைத்து பாடலுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அது என்ன ஒற்றுமை என்று, தான் சொல்லப் போகின்றோம்.

 

அனைத்து பாடல்களிலும் கதாநாயகன் கதாநாயகி வருவார்கள். அதே போல் இந்த படத்தில் மொத்தம் 7 பாடல்கள். அனைத்து பாடலையும் ஒற்றை பாடகர்கள் அதாவது டி எம் சௌந்தரராஜன் மற்றும் பி சுசிலா இருவர் மட்டுமே ஏழு பாடல்களையும் பாடி இருப்பார்கள். கண்ணதாசனின் வரிகளில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் டி எம் எஸ் மற்றும் சுசீலா ஆகியோர் பாடிய பாடல் தான் இன்றும் நம் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறது.

 

இந்த படம் அனைத்து எதிர்பார்ப்பையும் மீறி 100 நாட்களுக்கு மேல் ஓடியது. வணிக ரீதியாகவும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் அவர்களுக்கு நல்ல பணத்தை ஈட்டி கொடுத்தது.

Previous articleஎன்னையா மாநாடு.. பிரியாணியில் ஒரு லெக் பீஸ் கூட இல்ல! தொண்டர்களின் குமுறல்..!
Next articleபிரதமரின் ராமர் வழிபாடு பொய்யானது..அவர் ராமரை பின்பற்றவில்லை! பற்றவைத்த பாஜக நிர்வாகி!