காதலுக்கு தூது சென்ற சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன்!
திருப்பூர் மாவட்டதிலுள்ள தாராபுரம் பகுதியின் அருகேயுள்ள குண்டடம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தற்போது வீட்டில் வசித்து வந்துள்ளார். இதே போல இவர்களது வீட்டிற்கு அருகில் இவரது உறவினர் ஒருவருக்கு 17 வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவன் இருந்துள்ளான்.
இந்த நிலையில் இந்த சிறுவன் அருகிலுள்ள வேறொரு பெண்ணை பிடித்துள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணிடம் இவர் தனது காதலை வெளிப்படுத்துவதற்காக அடிக்கடி இந்த பக்கத்துக்கு வீட்டு சிறுமியை பயன்படுத்தி தன்னுடைய காதலிக்கு தூது அனுப்பி வந்துள்ளார்.
அதன் பின்னர் அடிக்கடி சிறுமி வந்து செல்வதால் சிறுவனுக்கு அந்த சிறுமியின் மீது தவறான எண்ணம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த சிறுமி அவர்களது வீட்டில் தனியாக இருந்த போது, இந்த சிறுவன் அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளான்.
பின்னர் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும் இங்கு நடந்ததை பெற்றோரிடம் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் அந்த சிறுமியை அவன் மிரட்டியுள்ளான். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதை கண்ட அவரது பெற்றோர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி 6 மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் தன்னுடைய மகளிடம் இந்த கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்று விசாரித்துள்ளனர். அதற்கு அந்த சிறுமி நடந்ததை அனைத்தையும் மறைக்காமல் கூறி உள்ளார்.
இதையடுத்து தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் கற்பழித்த அந்த சிறுவன் மீது புகார் அளித்தனர். இதனையடுத்து விசாரணை நடத்திய காவல் துறையினர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி அந்த சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.