எலான் மஸ்க்-க்கு போட்டியாக களமிறங்கிய..தமிழக முதல்வரின் மருமகன்!!

0
517
The son-in-law of the Chief Minister of Tamil Nadu, who entered the field as a competitor to Elon Musk!!
The son-in-law of the Chief Minister of Tamil Nadu, who entered the field as a competitor to Elon Musk!!

முதல்வர் மருமகன் புதிதாக ஒரு வானம் என விண்வெளி ஆய்வு தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் எலான் மஸ்க்-க்கு போட்டியாக வரும் என அவரின் ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.

உலகின் பணக்காரர்களில்  முதலிடத்தில் உள்ளவர் தான் எலான் மஸ்க். இவர் விண்வெளி ஆய்வு தொழில்நுட்ப ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் பல செயற்கை கோள்களை அவர் அமெரிக்காவில் ஏவி உள்ளார். உலகின் முதல் தனியார் விண்வெளி ஆய்வு தொழில்நுட்ப நிறுவனம் என்ற நிலையை இவர் அடைந்துள்ளார்.

மேலும் இவர் டெஸ்லா கார் நிறுவன உரிமையாளரும், டுவிட்டர் அதிபராகவும் உள்ளார் என்பது  அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் விண்வெளி ஆய்வு தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ளார். அந்த விண்வெளி ஆய்வு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு “வானம்” என பெயர் வைத்துள்ளார். இவர் அரசியலிலும் வணிகத்திலும் ரொம்ப வேலைகள் உள்ள நிலையில் இப்போது இவர் விண்வெளி ஆய்வு தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளார்.

மேலும் இந்த நிறுவனம் சபரீசன் சகோதரர் ஹரிஹரன், வேத மூர்த்தி, மற்றும் சமீர் ராம் ஆகியோர் கூட்டமைப்பில் இந்த விண்வெளி ஆய்வு தொழில்நுட்ப நிறுவனம் செயல்படுகிறது. இதற்கு தலைமை தாங்குவது சபரீசன் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த நிறுவனம் தொடங்க ஆதரவாக இருந்த உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எலான் மஸ்கின் நிறுவனத்திற்கு போட்டியாக இந்த நிறுவனம் வரும் என கூறி வருகிறார்கள். 

Previous articleரஜினியுடன் இப்படி நடிக்க வேண்டும் என்று முன்னதாகவே கூறியிருந்தால் நான் நடித்திருக்க மாட்டேன்!! நடிகை குஷ்பூ!!
Next articleபிணவறையில் ப்ரீசரில்  இறந்த உடல் !! எரியூட்டும் போது உயிருடன் வந்த நபரால் அதிர்ச்சி!!