வேண்டாம்டா! நான் உன் அம்மாடா என்று கதறிய தாய்! கேட்காத மகன் செய்த தவறான செயல்!

Photo of author

By Kowsalya

சொந்த தாயை தன் மகனே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவே என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாரவ்வா. இவருக்கு வயது 39. இவருடைய மகன் சிவப்பா. பாரவ்வாவின் கணவர் 15 ஆண்டுக்கு முன்பே இறந்து விட்ட நிலையில் அதே பகுதியை சேர்ந்த இன்னொரு இளைஞருடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார் பாரவ்வா.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் உன்னுடைய தாய் வேறொரு நபருடன் தொடர்பில் உள்ளார் என்று சிவப்பாவிடம் கூறியுள்ளனர். இந்த விஷயம் காரணமாகவே தாய்க்கும் மகனுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

அந்த நபருடன் இருந்த தொடர்பை முடித்துக் கொள்ளுமாறு மகன் தாய்க்கு எவ்வளவோ அறிவுறுத்தியும் தாய் கேட்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

சம்பவத்தன்று பாரவ்வா வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது சிவப்பா தன் தாயாரை மது அருந்தச் சொல்லி கட்டாயப் படுத்தி உள்ளார்.

இதனால் இருவருக்கும் சண்டை வந்துள்ளது. ஆத்திரத்தில் சிவப்பா தன் தாயை இழுத்துக் கொண்டு பக்கத்து வயலுக்குச் சென்று அங்கே அவரது தாயையே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

கொலை செய்துவிட்டு எதுவும் தெரியாதவர் போல் வீட்டிற்கு வந்துள்ளார். பாரவ்வாவை காணவில்லை என்று கூறி அவரது சகோதரி பாரவ்வாவை தேடி அலைந்துள்ளார். அப்பொழுது வயலில் பிணமாக கிடந்த பாரவ்வாவை பார்த்து அதிர்ந்து உள்ளார். உடனே பாரவ்வாவின் சகோதரி போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் சிவப்பாவை விசாரணை செய்தனர். விசாரணையில் தன் தாயையே பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அம்பலமாகி உள்ளது. இதனை அடுத்து சிவப்பாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.