வந்துவிட்டது ஒமைக்ரான் கொரோனாவுக்கான சிறப்பு தடுப்பூசி!! இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி! 

0
161
#image_title

வந்துவிட்டது ஒமைக்ரான் கொரோனாவுக்கான சிறப்பு தடுப்பூசி!! இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி!  

ஒமைக்ரான் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்கு புதிய வகை சிறப்பு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு உலகெங்கையும் ஒரு உலுக்கு  உலுக்கியது கொரோனா வைரஸ். ஆரம்பத்தில் சாதாரணமாக ஆரம்பித்த இந்த வைரஸின் தீவிரம் நாளாக நாளாக அதிகமாகி ஏராளமான உயிர்களை காவு வாங்கியது.  உலகெங்கும் பல கோடி மக்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டனர்.

உலக அளவில் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்களை காவு வாங்கிய இந்த கொரோனா வைரஸ் நமது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இங்கேயும் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா முதல் அலையால் அதிகம் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் இரண்டாவது அலை ஏராளமான மக்களை பலி வாங்கியது. மேலும் கொரோனாவின் மரபணு மாற்ற வைரஸான ஒமைக்ரான் அடுத்ததாக பாதிப்பை ஏற்படுத்தியது. சீனாவில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்த இந்த வைரஸ் நமது நாட்டில் அந்தளவு பாதிப்பு ஏற்படுத்தவில்லை.

இதையடுத்து கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியானது இரண்டு தவணைகளில் போடப்பட்டு ஓரளவு கொரோனா நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது 70% சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதன் காரணமாக கொரோனா நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அடுத்ததாக 3- வது சிறப்பு பூஸ்டர் டோஸ் ஊசி அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்ததாக பாரத் பயோடெக் நிறுவனம் கண்டறிந்த நாசி வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தான இன்கோவேக்  பயன்பாட்டுக்கு வந்தது.

இந்தியாவில் கொரோனா தொற்று தாக்கம் வெகுவாக குறைந்து விட்டாலும் அதை முற்றிலுமாக ஒழிப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது உருமாறி உள்ள ஒமைக்ரான் பரவலை முற்றிலும் தடுக்கும் வகையில் மத்திய அரசு நிதி உதவியுடன் மராட்டிய மாநிலத்தின்  ஜென்னோவா பயோபார்மாசூட்டிகல்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து ‘ஜெம்கோவாக்-ஓஎம்’ என்ற பூஸ்டர் தடுப்பூசி உருவாக்கப்பட்டது.

இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் சில நாட்களுக்கு முன்னர் ஒப்புதல் வழங்கிய நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஜெம்கோவாக்-ஓஎம் தடுப்பூசியை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். இனிமேல் இந்த சிறப்பு பூஸ்டர் தடுப்பூசியானது மக்கள் அனைவருக்கும் செலுத்தப்படும்.

Previous articleபேன் கார்டு ஜெராக்ஸ் கூட பத்திரமா வெச்சுக்கோங்க!! வங்கி பற்றிய முழு விவரத்தையும் இந்த ஒரு நகல் சொல்லிவிடும்!! 
Next articleமூன்று பொருட்கள் இருந்தால் போதும்!!  ஆய்சுக்கும் கால்சியம் குறைபாடு வராது இருப்பவர்கள் செய்து பாருங்கள்!!