இலங்கை அரசு தங்களது வளங்களை சீனாவிற்கு விற்க இரகசிய ஒப்பந்தம்! எதிர்க்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!

0
269
The Sri Lankan government has a secret agreement to sell its resources to China! Protesting Jaffna University students!
The Sri Lankan government has a secret agreement to sell its resources to China! Protesting Jaffna University students!

இலங்கை அரசு தங்களது வளங்களை சீனாவிற்கு விற்க இரகசிய ஒப்பந்தம்! எதிர்க்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!

சீனாவின் அணுகுமுறையின் அடிப்படையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வளமான விவசாய நிலங்களையும் கடற்பரப்பையும் சீனாவுக்கு விற்பதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே சீனாவுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். எமது நிலங்களையும் கடலையும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவிற்கு விற்கப் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசாங்கம் செய்து வருகிறது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களாகிய நாங்கள், அண்மையில் சீன பல்கலைக்கழகத்துடன் கைச்சாத்திட இருந்த ஒப்பந்தத்தை இரத்து செய்த துணை வேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா அவர்களுக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், அரசியல் நிர்ப்பந்தத்திற்காக எமது நிலத்தையும் கடலையும் வேறு நாடுகளுக்கு விற்க வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதுடன், நமது கடலையும், நிலத்தையும் காப்பாற்ற குரல் கொடுக்குமாறு சிவில் சமூகங்கள் மற்றும் அனைத்து மக்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றோம். இந்த கடமையிலிருந்து தவறுகின்ற பட்சத்தில், எதிர்காலத்தில் நாம் அனைவரும் எம்முடைய சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்படுவோம் என்று கூறியுள்ளனர்.

Previous articleதிமுக வருவாய்த்துறை அமைச்சருக்கு திடீர் மாரடைப்பு! மருத்துவமனையில் தீவீர சிகிச்சை!
Next articleஈரோடு அரசு மருத்துவமனையில் போராட்டம்! நோயாளிகள் கடும் அவதி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here