திமுக வருவாய்த்துறை அமைச்சருக்கு திடீர் மாரடைப்பு! மருத்துவமனையில் தீவீர சிகிச்சை!

0
96
DMK revenue minister has a sudden heart attack! Intensive treatment in the hospital!
DMK revenue minister has a sudden heart attack! Intensive treatment in the hospital!

திமுக வருவாய்த்துறை அமைச்சருக்கு திடீர் மாரடைப்பு! மருத்துவமனையில் தீவீர சிகிச்சை!

சில தினங்களுக்கு முன்பு தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யானந்தனுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்து மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். அதற்கு அடுத்தபடியாக தற்பொழுது திமுகவின் முக்கிய புள்ளியான வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அவர்களுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

வழக்கம்போல் நேற்று இரவு அவரது வீட்டில் ஓய்வில் இருந்து உள்ளார். அப்பொழுது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவர் வீட்டில் உள்ளவர்களை அழைத்துள்ளார். பின்னர் அவரது வீட்டினார் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்குள்ள மருத்துவர்கள் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

மருத்துவர்கள் சோதனை செய்து பார்த்ததில் அவருக்கு ரத்த நாளத்தில் அடைப்பு உள்ளதாக கூறியுள்ளனர். மேற்கொண்டு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது. ஆஞ்சியோ சிகிச்சை செய்ய இவரது குடும்பத்தினர் ஒப்புக்கொண்ட நிலையில், உடனடியாக மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை  அளித்தனர். மேலும் அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அவ்வபோது தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே வருவதாக கூறியுள்ளனர்.

திமுகவின் முக்கிய புள்ளியான வருவாய் துறை அமைச்சர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கட்சி தலைமைக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று முதல்வர் நேரில் சென்று அமைச்சரை பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.