டாஸ் வென்ற இலங்கை அணி! பந்து வீச்சு தேர்வு!

0
249

டாஸ் வென்ற இலங்கை அணி! பந்து வீச்சு தேர்வு!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் தொடர் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் தொடர் போட்டிகளில் விளையாடி வருகிறது.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கோப்பையை வென்று அசத்தியது.  இந்தப் போட்டிகளில் மூத்த வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், பும்ரா, ஆகியோர் விளையாடவில்லை.

இதனை அடுத்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. இதில் ரோகித் சர்மா,  விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.  பேகபந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறவில்லை.

இதனை அடுத்து அசாமின் கவுகாத்தியில் முதலாவது ஒரு நாள் போட்டிகள் இன்று தொடங்கின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் ஷனகா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அணியின் மூத்த வீரர்கள் திரும்பி உள்ளதால் இந்தியா ஒரு நாள் தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களம் இறங்கியுள்ளனர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவிற்கு சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதுவரை வந்த தகவலின் படி ஆட்டத்தின் 22 வது ஓவர் முடிவில் ரோகித் சர்மா 77 ரன்கள் (64பந்து), விராட் கோலி 6 ரன்கள் (6பந்து) எடுத்து 1 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் இந்தியா எடுத்துள்ளது.

Previous articleபழைய 100 ரூபாய் நோட்டுகள் உங்களிடம் உள்ளதா? உடனே முந்துங்கள் லட்சம் கணக்கில் பணம் பெறலாம்! 
Next articleஆளுநரை வெளியேற்ற பலே திட்டம்! ஆளும் கட்சியின் திடீர் ஆலோசனை கூட்டம்!!