chennai:சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி வழக்கம் போல மருத்துவ மனைக்கு வேலைக்கு சென்று இருக்கிறார். அப்போது நோயாளியின் உறவினர் ஒருவர் கத்தியால் மருத்துவர் பாலாஜியை சரமாரியாக குத்திய விட்டு தப்பி சென்று இருக்கிறார். கத்தி குத்தியதால் பலத்த காயமடைந்த மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை அளித்து வரப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த இளைஞர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள் போலீசார். முதற்கட்ட விசாரணையில் அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றி இருக்கிறார்கள், அவர்கள் பயன்படுத்திய கத்தி காய்கறி வெட்டும் கத்தி என்றும் அதை கூர்மைப்படுத்த தீயினால் வாட்டி உள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இச் சம்பவம் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டுள்ளது அதன் நோக்கம் என்ன என்று விசாரணையில் தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றார். மேலும் மருத்துவர் பாலாஜி அவர்களை நேரில் சந்தித்து ஆய்வு செய்துள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். மேலும் முதலமைச்சர் இச் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.
அதாவது கிண்டி அரசு மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இனி மேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்து தண்டனை வழங்கப்படும் என்றார்.