துணைமுதலமைச்சர் வெளியிட்ட அறிக்கை!! விளையாட்டில் சாதித்த வீரர்களுக்கு அரசு பணி!!

Photo of author

By Vijay

தமிழக அரசு பணியில்   ஸ்போர்ட்ஸ் கோட்டாவிற்கு 3 %சதவீத இட ஒதுக்கீடு உள்ளது.
இதன் அடிப்படையில் விளையாட்டில் சாதனை புரிந்தவர்களுக்கு அரசு பணி வழங்கப்படும். அந்த வகையில் மாவட்ட வாரியாக  விளையாட்டில் சாதித்த, 100 வீரர்களுக்கு அரசு பணி வழங்க பட்டியலை தயாரித்து வருகிறது தமிழக அரசு.

நீச்சல், வாள், படகோட்டுதல், தடகளம், ரோலர் ஸ்கேட்டிங், ஸ்குவாஷ், கபடி, சிலம்பம் உள்ளிட்ட பல வகையான போட்டிகளில் சிறந்து விளக்கும் வீரருக்கு, அரசு பணி நியமன  ஆணையம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி, சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விளையாட்டில் சாதித்த, 100 வீரர்களுக்கு அரசு பணி வழங்க மாவட்ட வாரியாக தேர்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இதன் அடிப்படையில் விளையாட்டு வீரர்களின் கல்வித்தகுதி, சர்வதேச தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் வென்ற பதக்கத்தை  பொறுத்து, அரசு துறையில் விரைவில் பணி நியமனம் வழங்கப்படும். என்ற தகவல் வெளியாகி விளையாட்டு வீரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் இதன் மூலம் பயன் பெற முடியும்.