இந்த படத்திலிருந்து சுட்ட கதை தான் ஜனநாயகனா.. 70% மேட்ச் ஆன சீன்ஸ்!!

0
159
The story from this film is democratic.. 70% matched scenes!!
The story from this film is democratic.. 70% matched scenes!!
TVK: தளபதி விஜய் தனது ரசிகர்களுக்கு கடைசியாக தரும் படம் தான் ஜனநாயகன். இப்படத்தின் மீது மக்கள் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது. இன்றளவும் இதுதான் அவருடைய கடைசி படம் என்று அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு வருடமும் தீபாவளி பொங்கலில் தியேட்டர் சென்று FDFS பார்த்தால்தான் தரிசனம் பூர்த்தி அடையும் என்று அவரது ரசிகர்கள் கூறுவர்.
 
ஆனால் இதுதான் தளபதியின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். தனது முழு வேலையாக அரசியலில் இறங்குவதால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் படத்தை எச் வினோத் இயக்கி உள்ளார். மேற்கொண்டு இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
 
அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து மெருகேற்றியுள்ளார். ஆரம்ப கட்டத்தில் இந்த படம் தெலுங்கில் வெளியான ஜூனியர் பாலையாவின் பகவந்த கேசரி படத்தின் ரீமேக் என பலரும் கூறி வந்தனர். ஆனால் இது ரீதியான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜனநாயகன்படக்குழு வெளியிடவில்லை. இதனின் முதல் பாடல் தளபதி கச்சேரி வெளியானதில் கிட்டத்தட்ட 70% உறுதியாகி உள்ளது.
 
தளபதி கச்சேரி பாடலில் ஒரு சில சீன்கள் பகவந்த் கேசரி படத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது. அதேபோல ஜூனியர் பாலையா அப்படத்தில் இருந்த தோற்றம், அவருடன் இருந்த துணை நடிகர்களை ஒத்துதான் ஜனநாயகத்திலும் இருக்கின்றனர். அந்த வகையில் இது தெலுங்கு ரீமேக் படமாக தான் இருக்கும் என பலர் கூறினாலும் இதனை அவரது ரசிகர்கள் ஏற்க மறுக்கின்றனர்.
Previous articleஅதிமுக திமுகவுக்கு ரெட் சிக்னல்.. ஓபிஎஸ் மட்டும் போதும்!! அமைச்சர் போட்ட வெடி!!
Next articleநீங்க இத பண்ணி தான் ஆகணும்.. திமுக கூட்டணி கட்சி ஆவேசம்!! கலக்கத்தில் ஸ்டாலின்!!