இயக்குனர் கதிரியக்கத்தில் நடிகர் முரளியின் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் இதயம். இத்திரைப்படத்தின் பின்பு பலரும் நடிகர் முரளி அவர்களை இதயம் முரளி என்று செல்லமாக அழைத்து வந்தனர். அப்படி நடிகர் முரளிக்கு பெயர் பெற்று கொடுத்தது தான் இத்திரைப்படம்.
இத்திரைப்படத்தின் மேலும் சில சுவாரசியமான தகவல்களை சத்ய ஜோதி ஃபிலிம் தியாகராஜன் அவர்கள் பகிர்ந்து உள்ளார்.
பாக்யராஜின் பத்திரிக்கையில் ஆர்கெஸ்ட் ஆக வேலை பார்த்து வந்த கதிர் அவர்கள் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் இடம் சென்று தன்னுடைய கதையை கேட்குமாறு கூறியிருக்கிறார். அதற்கு மறுத்த தியாகராஜன் அவர்கள் மற்றொரு நாள் அந்த கதையை கேட்பதற்காக கதிர் அவர்களை அழைத்துள்ளார்.
கதிர் அவர்கள் கூறிய கதையானது தியாகராஜன் அவர்களுக்கு மிகவும் பிடித்த போக, உடனே இதில் முரளிதான் கதாநாயகன் என முடிவெடுத்திருக்கிறார். மேலும் இத்திரைப்படத்தில் நடிக்க முதலில் நடிகை ரேவதியை தேர்வு செய்த இவர்கள், பின்பு புதிய நடிகையை அறிமுகம் செய்தால் நன்றாக இருக்கும் என்று சென்னையில் உள்ள கல்லூரிகளில் தேடி வந்துள்ளனர்.
அப்பொழுது, சென்னை உமன்ஸ் கிறிஸ்டியன் காலேஜில் நடிகை ஹீரா அவர்களை பார்த்து தன்னுடைய படத்திற்கு கமிட் செய்துள்ளனர். ஆனால் அதற்கு அவருடைய தந்தையார் மிலிட்ரியில் மேஜராக இருப்பதால் ஒத்துக்கொள்ள வில்லையாம். அதன்பின் சென்னை அண்ணா நகரில் உள்ள அவருடைய வீட்டிற்கே தியாகராஜன் அவர்கள் சென்று உங்களுடைய மகளுக்கு எந்தவிதமான பிரச்சனையும் வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று உறுதி அளித்து படத்திற்கு சம்மதம் வாங்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.