மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான அசத்தல் அறிவிப்பு! அரியர் தொகை இந்த மாதத்தின் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும்!

0
266
#image_title

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான அசத்தல் அறிவிப்பு! அரியர் தொகை இந்த மாதத்தின் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் ஹோலி பண்டிகைக்கு முன் மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு பற்றி அறிவிப்பு வந்துள்ளது.

அதன் படி அகவிலைப் படியை உயர்த்த மத்திய அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது எனவும் ஹோலி பண்டிகைக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி இதனை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஹோலி பண்டிகைக்குப் பிறகு நிதி அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிடும் எனவும் ஊடகங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு வெளியானதற்கு பிறகு சம்பளம் அதிகரிக்கப்படும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படையை நான்கு சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மார்ச் மாத சம்பளத்தில் இருந்து 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் சில ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்தில் இருந்து அகவிலைப் படி உயர்வு கிடைக்கும் ஜனவரி,ஜூலை ஆகிய மாதங்களில் அகவிலைப்படையை அரசாங்கம் மதிப்பாய்வு செய்து அதில் திருத்தம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத அரியர் தொகை மார்ச் மாத சம்பளத்துடன் சேர்ந்து கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமூன்று ஆண்டுகள் கழித்து ஜல்லிக்கட்டு!! நாமக்கல்லில் பொதுமக்கள் உற்சாகம்!!
Next articleஆஸ்கார் விருது வழங்கும் விழா!! முக்கிய விருந்தாளியாக தீபிகாவுக்கு அழைப்பு!!