மேற்படிபிற்காக 10 வருட போராட்டத்தை கையில் எடுத்த மாணவி! ஜாதியின் பெயரால் பங்கம்!
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் தீபா மோகன். இவர் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் அங்குள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் நேனோ அறிவியல் துறையில் பட்ட மேற்படிப்பை படித்துள்ளார். இவர் கடந்த 2011ஆம் ஆண்டு அதே துறையில் முனைவர் படிப்பில் சேர்ந்த சில நாட்களில் பேராசிரியர் நந்தகுமார் தன்னை ஜாதியின் பெயரை சொல்லி தவறாக பேசியதாகவும், முனைவர் படிப்பை படிக்க விடாமல் தடுத்து வருவதாகவும், குற்றம்சாட்டினார்.
இவரது ஆராய்ச்சிப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து முனைவர் பட்டம் பெறுவதற்கு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் சிலர், பல தடங்கல்களை ஏற்படுத்தி வருவதாகவும், அவர் குற்றம் சாட்டினார். மேலும் அவர், அவரை தடுக்கும் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பல்கலைக்கழகத்தின் வாசலில் கடந்த அக்டோபர் 29 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார்.
இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தாமஸ் தற்போது தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் மாணவி தீபாவால் தனது மேற்படிப்பை தொடர முடியவில்லை. இது குறித்து கூறுகையில் நான் பல்கலைகழகத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தேன்.
அப்போது போலீசார் சிலர் என்னை தாக்கினார்கள். மேலும் எனது உடல்நிலை சற்று மோசமாக உள்ளது. நான் ஒரு இதய நோயாளி. அதன் காரணமாக போராட்டத்திற்கு பிறகு கட்டாயமாக முழு நேர ஓய்வில் இருக்க வேண்டும். என்னுடைய மேற்படிப்பை தொடர கல்லூரி நிர்வாகம் என்னை அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதற்காக எதுவரை வேண்டுமானாலும் நான் போராட தயாராக இருக்கிறேன் என்றும் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். மேலும் அந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 2011 ம் வருடத்தில் எம்.பில் படிப்பில் சேர்ந்துள்ளார். அவர் சொல்லும் படி பார்த்தால் கடந்த 2015 ம் ஆண்டே அவர் தனது ஆராய்ச்சி படிப்பை நிறைவு செய்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். .ஆனால் சில பேராசிரியர் உட்பட, சில அதிகாரிகள் சாதியின் பெயரால் தனக்கு பல தடங்கல்களை ஏற்படுத்துவதாகவும், அதன் காரணமாக தான் தன்னால் முனைவர் பட்டத்தை பெற்று அவரால் படிப்பை முடிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.