கீழே தள்ளிவிட்டு முடி புடவையை இழுத்து கொடூரமாக தாக்கிய மாணவர்கள்! 5 மாத கர்ப்பிணி ஆசிரியை மருத்துவமனையில் அனுமதி!
தற்பொழுது மாணவர்கள் ஆசிரியர்களை தாக்கும் காலம் தான் உள்ளது. முன்பெல்லாம் மாணவர்கள் ஏதேனும் தவறு செய்தால் அவர்களை திருத்துவதின் முக்கிய பங்கு ஆசிரியர்களை சென்றடையும். ஆனால் தற்போது காலகட்ட அரசு மாணவர்களை தாக்கினால் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். இதனை பல மாணவர்களும் தவறாக பயன்படுத்தி ஆசிரியர்களையே தாக்கி வருகின்றனர்.
அந்த வகையில் அசாமில் கர்ப்பிணி ஆசிரியர் என்று கூட பார்க்காமல் மாணவர்கள் சரமாரியாக தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அசாமில் திப்ருகார் என்ற மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் ஜவகர் நவோதயா வித்யாலயா என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அப்பள்ளி வரலாற்று ஆசிரியர் ஒருவர், ஒரு மாணவரை குறிப்பிட்டு அவர் கல்வியில் எந்த நிலையில் உள்ளார் என்பதை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த மாணவன் அவர்களது நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து அந்த ஆசிரியரை தாக்கியுள்ளார். அந்த ஆசிரியர் 5 மாத கர்ப்பிணி என்று கூட பாராமல் அவரை தள்ளிவிட்டும் முடியை பிடித்து இழுத்தும் தாக்கியுள்ளனர்.
உடனடியாக அங்கிருந்த இதர ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் அந்த ஆசிரியரை பாதுகாத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதோடு விட்டு விடாமல் அந்த மாணவன் பள்ளியின் துணை முதல்வரையும் மிரட்டியுள்ளார். மேலும் அவரது வீட்டையும் முற்றுகையிட்டுள்ளனர். தற்பொழுது தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தற்போது வரை வழக்கு பதிவு ஏதும் செய்யப்படவில்லை என்று காவல்துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.