PMK: பாமக தலைவர் அன்புமணி மகள் சங்கமித்ரா “அலங்கு” என்ற படத்தை தயாரிக்க உள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதுவரை எந்த ஒரு நிகழ்வுகளிலும் வெளிவராத இவரது மகள்கள் கடந்த மக்களவை தேர்தலில் அவரது அம்மாவிற்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் இரு மகள்களில் இரண்டாவது மகள் செய்த பிரச்சாரமானது மக்களை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம். இவரது பிரச்சார முறையை பார்த்து பலரும் முழு நேர அரசியலில் இறங்க போகிறீர்களா எனக் கேள்வி எழுப்பினர்.
ஆனால் அதைப்பற்றி எந்த ஒரு தெளிவான பதிலையும் அவரது இரண்டாவது மகள் அளிக்கவில்லை. இவ்வாறு இருக்கையில் தற்பொழுது இவர் “அலங்கு” என்ற படத்தை தாயரிப்பாளர் டி சபரீஷுடன் சேர்ந்து தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக குணாநிதி மற்றும் முக்கிய காதாபாத்திரத்தில் செம்பன் வினோத், காளிவெங்கட் ,சரத் அப்பாணி,ஸ்ரீ ரேகா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
இந்த திரைப்படமானது தமிழக மற்றும் கேரளா எல்லையில் கொட்டப்படும் கழிவுகள் மக்களை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பது குறித்து கூறும் விதமாகவும், அங்கு வசிக்கும் பழங்குடியினரின் வாழ்க்கையை பற்றி எடுத்துரைக்கும் வகையில் இருக்குமென கூறியுள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தை அடுத்து படம் தயாரிப்பாளராக அன்புமணி அவர்களின் மகள் புதிய அவதாரத்தை எடுத்துள்ளார். மக்கள் மத்தியில் இப்படம் குறித்த எதிர்ப்பார்ப்புக்கள் சற்று அதிகமாகவே உள்ளது.