Cinema: சினிமா துறையில் இந்த காலகட்டத்தில் தான் ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் தங்களது திருமணத்தை ஓர் திருவிழாவாக முன்கூட்டியே அறிவித்து அதனை ஒரு சோசியல் மீடியா பிளாட் பார்மிக்கு விற்றும் விடுகின்றனர். ஆனால் 80 மற்றும் 90களில் தங்களுக்கு திருமணம் ஆவதையே வெளியே சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் திருமணமானவர்கள் எனக் கூறினால் அவர்களின் சினிமா வாய்ப்பு பறிபோகும் என நினைத்தனர்.
அப்படி தற்போது டாப் ஹீரோவாக இருக்கும் ஒருவர் தான் தனக்கு திருமணமானதையே கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக மறைத்துள்ளார். இந்தியா முழுவதும் மிகவும் ஃபேமஸான லகான், தங்கள், 3 இடியட்ஸ் போன்ற படங்கள் மூலம் அடையாளம் காட்டப்படுபவர் தான் ஆமிர் கான். இவர் தனது 21 வயதிலேயே ரீனா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அதுவும் இரு வீட்டாருக்கும் தெரியாமல் ரகசிய திருமணம் செய்துள்ளனர். நாளடைவில் பெண் வீட்டாருக்கு தெரிய வரவே ஆமிர் கான் தனது வீட்டிற்கு ரீனாவை அழைத்து சென்றுள்ளார்.
திடீரென்று ரீனாவை அழைத்து சென்றதால் இவருடைய காதலி என அவரது வீட்டார் நினைத்துள்ளனர். ஆனால் திருமணமானதை சொன்னவுடன் ஏற்றுக் கொண்டனர். ரீனாவின் தந்தைக்கு சிறிதும் கூட இது பிடிக்கவில்லை. இதனால் அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டுவிட்டது. அச்சமயத்தில் மருத்துவமனையில் அனுமதித்த ரீனாவின் தந்தையை ஆமிர் கான் பார்த்துக் கொண்ட முறையால் அவர் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர். ஒரு கட்டத்தில் இவர்களின் 16 ஆண்டு கால வாழ்க்கையானது முடிவுக்கு வந்தது. இருவரும் விவாகரத்து கொடுத்து பிரிந்தனர்.
இவர்களுக்கு ஜூனைத் மற்றும் இரா என்ற இரு குழந்தைகள் உள்ளனர். அதில் ஜூனைத் தான் தற்போது இயக்குனராக திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். இதற்கு அடுத்து கிரென் ராவ் என்பவரை திருமணம் செய்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். இவருடனும் மனக்கசப்பை ஏற்பட்டு தற்போது 60 வயதாகும் நிலையில் ஆமிர் கான் கௌரி என்பவருடன் டேட்டிங் செய்து வருகின்றனர். மேற்கொண்டு தனது 60 வது பிறந்த நாளில் கௌரி என்பவரை காதலியாக அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.