நெப்போலியன் இடம் மனம் உருகி மன்னிப்பு கேட்ட சூப்பர் ஸ்டார்!!

Photo of author

By Gayathri

நடிகர் நெப்போலியன் அவரது மூத்த மகரான தனுஷிற்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்தார். இந்த திருமணம் தொடர்பான பல விமர்சனங்களும் சர்ச்சை பேச்சுக்களும் பரவலாக தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.

தமிழ்நாட்டில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்ற நெப்போலியன் அவர்கள் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். மேலும் அங்கு ஒரு தொழில்நுட்ப கம்பெனியை உருவாக்கி அதற்கு தன்னுடைய மூத்த மகனை சிஇஓவாக மாற்றியுள்ளார். மேலும் தன் மகனின் எதிர்கால வாழ்க்கையை நினைத்தவர், திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

அவ்வாறு திருமணத்தை குறித்து முடிவெடுக்கும் பொழுது அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் அந்தப் பெண்ணும் தனுஷை திருமணம் செய்ய ஒப்புக்கொண்ட நிலையில் இருவருடைய திருமணமும் ஜப்பானில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பல திரை துறை சார்ந்த நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் என்ற செய்தியை நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம்.

ஆனால் அறியாதவை இன்னும் சில, நடிகர் நெப்போலியன் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் ரஜினி கமல் உள்ளிட்டவருக்கும் தன்னுடைய மகனின் திருமணத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் இவர்களால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களோ திருமணத்தில் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்று நெப்போலியன் அவர்களுக்கு போன் செய்து மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் தான் அமெரிக்கா வரும் பொழுது கண்டிப்பாக நேரில் வந்து தங்களை சந்திக்கிறேன் என்றும் உறுதி கூறியுள்ளார்.