அதிமுகவிற்கு ஆளும் தகுதியும் தன்மையும்  இல்லை! “தண்ணீர் இல்லாத ஊரில் எடப்பாடி வாஷிங்மிஷின் கொடுப்பதாக சொல்கிறார்”கமல்ஹாசனின் கறார் பேச்சு!  

0
84
The supremacist has no right to rule! "Edappadi says he will give a washing machine in a city where there is no water" Kamal Haasan's speech!
The supremacist has no right to rule! "Edappadi says he will give a washing machine in a city where there is no water" Kamal Haasan's speech!

அதிமுகவிற்கு ஆளும் தகுதியும் தன்மையும்  இல்லை! “தண்ணீர் இல்லாத ஊரில் எடப்பாடி வாஷிங்மிஷின் கொடுப்பதாக சொல்கிறார்”கமல்ஹாசனின் கறார் பேச்சு!

வரும் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் மக்களின் ஓட்டுகளை பெறுவதற்கு அனைத்து கட்சிகளும் பல சலுகைகளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்ய போகிறோம் என்று கூறி வருகிறது.அதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.அவர் கோவையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.அதனைத்தொடர்ந்து கோவையில் நேற்று மண்,மொழி மக்களை காக்க என்ற பொதுக் கூட்டம் தேர்நிலை திடலில் நடைபெற்றது.பின்னர் அவர் மக்களிடம் உறவே உயிரே என்று ஆரம்பித்தார்.

அதனைத்தொடர்ந்து அனைவரும் ஏன் கோவையில் போட்டியிடுகிறிர்கள் எனக் கேட்கின்றனர்.நான் ஏன் போட்டியிடக் கூடாது எனது உறவுகளாகிய மக்கள் 234 தொகுதிகளிலும் உள்ளனர்.ஆரம்பித்திலிருந்தே சாதி,மதம் என என்னை அனைவரும் ஒதுக்க நினைத்தார்கள்.அதன்பின் மயிலாப்பூரில் எனது உறவினர்கள் இருக்கின்றனர் அங்கு போட்டியிடுவேன் என்று கூறினார்கள்.ஆனால் நான் எதற்கும் அசையவில்லை.அதனைத்தொடர்ந்து அவர் பேசியபோது மக்கள் சேவைதான் அரசியல்.நான் நாற்பது ஆண்டுகளாக அனைத்து ஊருகளிலும் செய்த நற்பணிகள் சேவைகள்  இன்றும் பேசப்பட்டு வருகிறது என்றார்.

அந்த நற்பணிகளின் விதை முதன்முதலில் நான் போடப்பட்டது எனக் கூறினார்.நான் தேர்தலுக்கு பிறகு நடிக்க போய்விடுவேன் என்று பலர் கூறுகின்றனர்.ஆனால் நடிப்பு எனது தொழில்.சிலர் தொழிலையே அரசியலாக வைத்துள்ளனர் என்று குதிர்க்கமாக பேசினார்.33 சதவீதம் கிரிமினல்ஸ் அந்த இரு காட்சிகளில் தான் உள்ளார்கள் அதுமட்டுமின்றி அதிமுக தலைவர் கூறியுள்ளார்,நான் ஆட்சிக்கு வந்த பிறகு அனைவருக்கும் வாஷிங்மிஷின் தருவேன் என்று தண்ணீரே இல்லாத ஊரில் மக்கள் வாஷிங்மிஷினை வைத்து என்ன செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை.

அதிமுகவிற்கு ஆளும் தகுதியும்,தன்மையும் இல்லை என எதிர்கட்சியினரை வாட்டி வதக்கி பேசினார்.இந்தியாவின் மான்செஸ்டர் என கோவைக்கு பெயர் இருந்தது.முதலில் ஆட்சியிலிருந்தவர்கள் மின் வெட்டு காரணமாக பல தொழில்களை வேறு மாநிலங்களுக்கு தொரத்தி விட்டனர்.அதனையடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் கடனை ரூ.7 லட்சம் கோடியாக உயர்த்திவிட்டனர் என்று இரு தரப்பினரையும் தனது பேச்சினிலேயே சரமாரியாக வெளுத்து வாங்கினார்.அதன்பின் தனது கட்சியினரை அவரே புகழ்ந்து பேசினார்.அப்போது அவர் கூறியது,எங்கள் கட்சியினர் சாதனையாளர்கள்.கொங்கின் சங்கநாதம் கோட்டியில் ஒழிக்க வேண்டும்.

அதைப் ஒழிப்பவன் நானாக இருக்க வேண்டும் என சினிமா பட பாணியில் எதுகை முனையாக பேசினார்.3  வது அணி எப்போதும் வெற்றி பெற போவதில்லை என கூறுகின்றனர்.ஆனால் எம்.ஜி.ஆரும்  3 –ஆவது அணியாக இருந்து வெற்றி பெற்றவர் தான்.அதுபோலத்தான் நானும் என சொல்லாமல் சொல்வது போல் பேசினார்.கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக 2 இடங்களை ஒதுக்கீடு செய்வதாக மேடையில் அறிவித்தார்.அதில் ஆயிரம் விளக்கு தொகுதியில் செரீப்பை நிறுத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.