தமிழக அரசுக்கு எதிரான வழக்கு விசாரிக்க உச்சநீதிமன்றம் விதித்த அதிரடி தடை!

0
129

தமிழகத்தில் பல வருடங்களாக காவிரி ஆற்றில் தண்ணீர் வராமல் டெல்டா பகுதிகளில் விவசாயம் பொய்த்துப் போய்க் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், தற்போது பருவமழை தமிழ்நாடு முழுவதும் பெய்து வருவதால் காவிரியாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. அளவுக்கதிகமாக காவிரியாற்றில் நீர் வருவதால் வரும் நீர் அப்படியே கடலுக்கு திருப்பி விடப்படுகிறது. அதோடு தமிழகத்தில் பல்வேறு அணைகளும் நிரம்பி விட்டபடியால் அனைத்து நதிகளிலும் வரும் நீர் அப்படியே கடலுக்கு திருப்பி விடப்பட்டு வருகிறது.

ஆனால் இப்படி வீணாக கடலில் நீர் கலப்பதை தடுக்கும் விதமாக தடுப்பணைகளை கட்டி தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று பல வருடங்களாக பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களும், சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும், தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனாலும் அப்படி எந்த ஒரு திட்டத்தையும் இதுவரையில் மத்திய, மாநில, அரசுகள் முன்னெடுக்கவில்லை .

இந்த விஷயத்தில் மத்திய, மாநில, அரசுகள் அலட்சியம் காட்டுவதால் பல டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது0 தண்ணீர் இல்லை என்று பக்கத்து மாநிலத்திடம் கையேந்தி நிற்பதை விட இப்படி தமிழகத்தில் மழை பெய்யும் போது வரும் தண்ணீரை சேமித்து வைத்தால் நாம் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களிடம் கையேந்த வேண்டிய சூழ்நிலையை ஏற்படாது என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், சென்னையில் ஆக்கிரமிப்பு காரணமாக, மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.

Previous articleகாப்பீடு தொகை பெறுவதற்கு மனைவியை சுட்டுக்கொன்ற கருணை இல்லாத கணவன்!…
Next articleகண்ணிமைக்கும் நொடியில் அப்பளம் போல் நொறுங்கிய லாரி! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!