கமலுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!! குண்டர்கள் வீதிகளை கைப்பற்ற அனுமதிக்க முடியாது!!

0
11
The Supreme Court ruled in favor of Kamal!! We cannot allow thugs to take over the streets!!
The Supreme Court ruled in favor of Kamal!! We cannot allow thugs to take over the streets!!

கமலஹாசன் நடிப்பில் Thug Life திரைப்படம் 5 ஜூன் 2025 அன்று வெளியானது. படம் வெளியாவதற்கு முன்னர் கமலஹாசன் கர்நாடகாவில் படம் தொடர்பான ப்ரோமோஷன் செய்ய சென்றிருந்தார். அப்போது தமிழில் இருந்து தோன்றிய மொழி தான் தெலுங்கு என்று பேட்டி கொடுத்தார். இது கர்நாடகாவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. Thug Life படத்தை கர்நாடகாவில் வெளியிட மாட்டோம், கமலஹாசன் இந்த கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.

ஆனால் கமல் எந்த மன்னிப்பும் கேட்கவில்லை. தப்பு பண்ணுனா தான் மன்னிப்பு கேட்கணும், என்னால் இந்த விசயத்திற்கு மன்னிப்பு கேட்கமுடியாது என்று சொல்லிவிட்டார். கர்நாடகா உயர்நீதி மன்றம் கூட மன்னிப்பு தானே கேட்க சொல்கிறார்கள், தன்னுடைய கருத்தை பின் வாங்கிவிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டு கர்நாடகாவில் படத்தை கமலஹாசன் வெளியிட வேண்டியது தானே என்று கமல் தொடர்ந்திருந்த வழக்கில் கருத்து தெரிவித்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பான முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. ஒரு படம் பார்க்க வேண்டுமா, வேண்டாமா என்பதை மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்வது உயர்நீதி மன்றத்தின் வேலை அல்ல. உயர்நீதி மன்றம் எப்படி அப்படி கூறலாம். இந்த நாட்டில் குண்டர்கள் வீதிகளை கைப்பற்ற அனுமதிக்க முடியாது என்று கமலஹாசனுக்கு ஆதரவாக கருத்துக்களை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

Previous articleரஜினிகாந்தே எனக்கு ஒரு ஆள் கிடையாது! உங்க அண்ணன் என்ன பெரிய கொம்பனா? மீண்டும் விஜய்யை சீண்டிய வேல்முருகன்!
Next articleபயணிகளின் கவனத்திற்கு..தெற்கு ரயில்வே சார்பாக சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்!