பயிற்சியின் பொழுது விபத்தில் சிக்கிய சூரியகிரண் விமானம்! கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல்!!

0
193
#image_title

பயிற்சியின் பொழுது விபத்தில் சிக்கிய சூரியகிரண் விமானம்! கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல்!

கர்நாடக மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது  இந்திய விமானப் படையின் சூரிகிரண் விமானம் கிழே விழுந்து நொறுங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சமராஜாநகர் மாவட்டத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான சூரியகிரண் பயிற்சி விமானம் வழக்கம் போல பயிற்சியை மேற்கொண்டது.

இந்த பயிற்சியில் பெண் விமானி ஒருவர் உள்பட இரண்டு விமானிளும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பயிற்சியின் பொழுது போகாபூர் கிராமத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விமானம் விபத்துக்குள்ளாவதை முன்னரே அறிந்த விமானிகள் விமானத்தில் இருந்து வெளியே குதித்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Previous articleநெல் கொள்முதல் செய்வதில் புதிய வசதி! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!
Next articleதேர்தல் வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு திருடியுள்ளார்! அமைச்சர் ரோஜா அவர்கள் குற்றச்சாட்டு!!