ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான் அரசின் தலைவராக முகமது
ஹசன் முகுந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
20 வருடங்களாக தாலிபன் மற்றும் தீவிரவாத அமைப்புகளுடன் போரிட்டு வந்த அமெரிக்க மற்றும் நேட்டோ கூட்டுப்படைகள் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதியோடு ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினர். அதன்பின்னர் பஞ்ஷீர் கிளர்ச்சி படையுடன் தாலிபான்கள் மோதல் போக்கை கடைப்பித்து வந்தனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியதாக தெரிவித்துள்ள தாலிபான்கள் அந்நாட்டில் அரசை நிறுவியுள்ளனர். அதன்படி, அரசின் தலைவராக முகமது ஹசன் முகுந்த் தேர்வு செய்யப்பட்டுட்டுள்ளார். துணைத் தலைவராக அப்துல் கனி ஃபராதர் செயல்படுவார் என்றும் தலிபான் அரசின் உள்துறை அமைச்சராக சிராஜுதீன் ஹக்கானி செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஆப்கன் போரில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட யாகூப் பாதுகாப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தாலிபான்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.