Afghanistan: பெண்கள் வசிக்கும் வீட்டில் ஜன்னல் இருக்க கூடாது என தலிபான் அரசு தடை விதித்து இருக்கிறது.
கடந்த 2021 ஆம் தலிபான்கள் ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிரான போரில் வென்று ஆப்கானிஸ்தான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்க ராணுவ உதவியுடன் தாலிபான் அமைப்புகளை கட்டுப்படுத்தி வைத்து இருந்தார்கள். இந்த நிலையில் 2021 ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இவர்கள் ஆட்சி பொறுப்பை கையில் எடுக்கும் போது பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என உறுதி அளித்தார்கள். இருந்த போதிலும் தலிபான்கள் இஸ்லாமிய பிற்போக்கு தனமான மத கட்டுப்பாடுகளை கடுமையாக்க கடைபிடித்து வருபவர்கள். குறிப்பாக பெண்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள். அதாவது,பெண்கள் உயர் கல்வி படிக்க கூடாது, வேலைக்கு போகக்கூடாது, தனியாக சமூக வெளியில் நடமாட கூடாது.
பெண்கள் தனியாக பூங்காக்களுக்கு செல்ல கூடாது. ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக பூங்காக்களுக்கு செல்ல வேண்டும். பெண்கள் பாடல் படக் கூடாது. கால் பாதம் முதல் தலை வரையிலும் முழுமையாக மறைக்க கூடிய ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும், ஆண், பெண் என தனித்தனியாக விமானங்களில் செல்ல வேண்டும். பெண்கள் ஆண் மருத்துவரிடம் சிகிச்சை பெற கூடாது என போன்ற கடுமையான சட்டங்களை அன் நாட்டில் அமல் படுத்தி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் மீண்டும் பெண்களுக்கு புதிய கட்டுப்பாட்டை தலிபான் அரசு அறிவித்துள்ளது. அதாவது, பெண்கள் வீட்டில் அதிகம் வேலை செய்யும் இடங்களில் சமையலறை, கிணற்றில் நீர் எடுக்கும் இடம், துணி துவைக்கும் போன்ற இடங்களில் இருக்கும் ஜன்னல்களை வைப்பதை தவிர்க்க வேண்டும் என சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள்.