TN Gov: தமிழக அரசானது பல்வேறு தரப்பட்ட மக்களுக்கும் உதவித்தொகை நலத்திட்டங்கள் உள்ளிட்டவற்றை செய்து வருகிறது. அந்த வகையில் பள்ளி படிக்கும் மாணவர்கள் மாணவிகள் அனைவருக்கும் ரூ ஆயிரம் உதவித்தொகையாக வழங்குகிறது. அத்தோடு கல்லூரி படிப்பை தொடர்பவர்களுக்கும் மாதம் ஆயிரம் வழங்கி உதவுகிறது. அத்தோடு குடும்ப தலைவிகளை உயர்த்தும் வகையில் மாதம் ஆயிரம் வழங்குகிறது.
மேற்கொண்டு அந்த திட்டத்தை விரிவாக்கம் செய்வதாகவும் இம்முறை சட்டப்பேரவையில் அறிவித்துள்ளனர். இதன் மூலம் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது திருநங்கைகளுக்கென்று புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஆதரவற்ற திருநங்கைகளை ஆதரிக்கும் வகையில் மாதம் 1500 ரூபாயை ஓய்வூதியமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இத்திட்டத்திற்கென்று தனி வரையறையை கொடுத்துள்ளனர்.
அதன்படி இத்திட்டம் பயன்பெற விரும்புவோர் கட்டாயம் 40 வயதிற்கு மேற்பட்டோராக இருக்க வேண்டும். திருநங்கை நல வாரியத்தின் அடையாள அட்டையை வைத்திருப்பது அவசியம். இதனோடு ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், உள்ளிட்டதையும் கொடுக்க வேண்டும். குறிப்பாக இந்த ஓய்வூதியம் பெரும் திருநங்கை தங்களின் குடும்பம் சார்ந்த யாரிடமும் உதவி பெறாத நபராக இருப்பது கட்டாயம் எனக் கூறியுள்ளனர்.
திட்டம் மூலம் பயன்பெற நினைப்பவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நல அலுவலரை சந்திக்க வேண்டும். அவரிடம் உங்களது விண்ணப்பத்தை கொடுத்து ஒப்புதல் வாங்கும் பட்சத்தில் மாதம் ரூபாய் 1500 ஐ ஓய்வூதியமாக தமிழக அரசிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.