இவர் ஆசிரியையா? இல்லை புரோக்கரா? மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியை!!
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்து காரத்தொழுவு பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த கணித முதுகலை ஆசிரியை சாந்தி பிரியா மாணவிகளிடமும் மற்றும் சக ஆசிரியர்களிடமும் அத்து மீறியதாக புகார்கள் எழுந்துள்ளது.
இவரின் மீது தொடுக்கப்பட்ட புகார்கள் பின்வருமாறு:
இரவு நேரத்தில் மாணவிகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு அவர்களிடம் பாட சம்மதமாக பேச வேண்டும் என்று கூறி,கூறியதை தவிர்த்து தேவையற்ற விஷயங்களை பேசி வந்துள்ளார்.இதனால் அவரின் அழைப்பை ஏற்க மறுத்த மாணவிகளிடம்,எனது அழைப்பை ஏற்காவிட்டால் மதிப்பெண்ணில் கை வைத்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார்.
மாணவிகளை தூங்கும் பொழுது ஆசிரியரின் கணவரை நினைத்துக் கொண்டுதான் தூங்க வேண்டும் என்று மாணவிகளிடம் வன்ம உணர்வை விதைத்துள்ளார்.
சில நேரங்களில் ஆசிரியரின் காலில் விழுந்து ப்ளீஸ் கிளாஸ் எடுங்கள் என்று மாணவிகள் கெஞ்சினால்தான் பாடம் எடுப்பேனென்று அத்துமீறி உள்ளார்.
மற்ற ஆசிரியர்களுடன் சண்டையிட்டுவிட்டு,வகுப்பறையில் இருக்கும் கரும்பலகையில் பலிக்கு பலி என எழுதி மாணவர்களின் மனதில் பழி உணர்வை விதைத்துள்ளார்.
மேலும் அவரது வகுப்பறையில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவி ஒருவரை மருமகளே என்று அழைக்கும் இவர்,அந்த மாணவியை தனது மகனிடம் இரவில் செல்போனில் பேச வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.
ஆசிரியை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை!!
இதனால் மாணவிகளும் மாணவிகளின் பெற்றோர்களும் மற்றும் இவருடன் பணி புரிந்த சக ஆசிரியர்களும் இவரின் மீது மாவட்ட உயர்கல்வி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
வட்டார கல்வி அதிகாரிகளுடன் மாவட்ட கல்வி அதிகாரிகள் நேரடியாக பள்ளிக்குச் சென்று அங்கு மாணவிகளை விசாரணை நடத்திய அதிகாரிகள் புகாரியில் தெரிவிக்கப்பட்டவை அனைத்தும் உண்மை என்று கூறவே அந்த ஆசிரியை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்துள்ளனர்,உயர்கல்வி அதிகாரிகள்.
மாணவிகள் அல்லது பெற்றோர்கள் என யாரும்,அந்த ஆசிரியை மீது பாலியல் துன்புறுத்தல் குறித்து எந்தவித புகார் தெரிவிக்காததால் இவரை கைது செய்ய இயலாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவரை கைது செய்யாமல் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்தால்,இடமாற்றம் செய்யப்படும் பள்ளியிலும் இவர் அத்துமீறமாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்?என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடத்தில் பெரும் கேள்வி எழுந்துள்ளது.
மேலும் இந்த ஆசிரியையை போகோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாணவர்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.