மூன்று முறை ஒரே மாணவியை குறி வைத்த வாலிபர்! சேலத்தில் பரபரப்பு!

Photo of author

By Parthipan K

மூன்று முறை ஒரே மாணவியை குறி வைத்த வாலிபர்! சேலத்தில் பரபரப்பு!

Parthipan K

The teenager targeted the same student three times! Excitement in Salem!

மூன்று முறை ஒரே மாணவியை குறி வைத்த வாலிபர்! சேலத்தில் பரபரப்பு!

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுக்கா செம்மாண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை இரண்டு முறை கடத்திச் சென்றுள்ளார்.இதனையடுத்து இரண்டு முறையும் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார்கள் பிரகாஷ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.

இத்தனை தொடர்ந்து அதே மாணவியை பிரகாஷ் மூன்றாவது முறையாக கடத்தி சென்றுள்ளார்.இதனை மாணவியின் தாயார் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் ஆய்வாளர் இந்திரா பிரகாஷ் மீது மூன்றாவது முறையாக போக்சோ வழக்கு பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.