பிளிப்கார்டில் ஆடர் செய்த வாலிபர்! ட்ரோன் கேமாராக்கு பதில் பொம்மை கார்!

Photo of author

By Parthipan K

பிளிப்கார்டில் ஆடர் செய்த வாலிபர்! ட்ரோன் கேமாராக்கு பதில் பொம்மை கார்!

தற்போது உள்ள காலகட்டத்தில் மக்கள் அனைவரும் அவரவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை வீட்டில் இருந்த படியே போனில் ஆடர் செய்து வாங்கி கொண்டு வருகின்றனர். அதில் பிளிப்கார்ட் ,அமேசன் ,போன்ற செயலிகள் செயல்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஸ்ரீபெரும்புத்தூர் சிவந்தாங்கலை சேர்ந்தவர் மொய்தீன்.இவர் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.இவருடைய நண்பர் சுரேஷ் என்பவருக்கு கிரெடிட் கார்டு மூலம் 79,064 ரூபாய் செலுத்தி கடந்த 20 ஆம் தேதி ட்ரோன் கேமாரா பிளிப்கார்ட் செயலியில் ஆடர் செய்துள்ளார்.அப்போது பிளிப்கார்ட் பார்சல் வந்தது.

அந்த பார்சல் தட்டையாக வந்திருந்தது அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் வீடியோ பதிவு செய்து கொண்டே அந்த பார்சலை திறந்தனர்.அப்போது அந்த பார்சலில் 100 ரூபாய் மதிக்கத்தக்க பொம்மை கார் ஒன்று இருந்தது.அதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக அவர்கள் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் பிப்கார்ட் நிறுவனம் விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.ட்ரோன் கேமராவுக்கு பதிலாக பொம்மை கார் அனுப்பி வைத்துள்ளதை கண்டு அதிர்ச்சியிலும் வியப்பிலும் உள்ளனர்.