sabarimala:சபரி மலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு பம்பை பார்க்கிங் வசதி செய்து உள்ளது கோவில் நிர்வாகம்.
சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகின்ற கார்த்திகை மாதம் முதல் தேதி முதல் 41 நாட்கள் நடைபெறும். மேலும் சபரி மலை சீசன் தொடங்க உள்ளது. இதற்கான முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது கோவில் நிர்வாகம். அந்த வகையில் ஒரு புதிய அறிவிப்பு வெளியீடு இருக்கிறது.
அதாவது பம்பையில் பக்தர்கள் வாகனங்களுக்கு பார்கிங் வசதி செய்து இருக்கிறது. கடந்த வருடங்களில் நிலக்கலில் பகுதி வரை மட்டுமே பக்தர்கள் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. இதனால் நிலக்கல் பகுதியில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது. மேலும் பக்தர்கள் நிலக்கல் முதல் பம்பை வரை கேரள அரசு பேருந்துகள் மூலம் அழைத்து வரப்படுவார்கள்.
மேலும் சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை பற்றாக்குறையாக இருந்தது. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். இது பம்பை வரையில் கேரள அரசிடம் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்த வழக்கு நீதிபதிகள் அனில் நரேந்திரன், முரளி கிருஷ்ணன் தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டது. இதன் முடிவில் பக்தர்களின் வசதிக்காக பம்பை வரை வாகனங்கள் அனுமதிக்க உத்தரவிட்டுள்ளார்கள்.
மேலும் ஆன்லைன் புக்கிங் முறையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஸ்பாட் புக்கிங் முறையில் ஒரு நாளைக்கு பத்தாயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற செய்தியையும் வெளியீட்டு இருக்கிறது.இதனால் பக்தர்கள் மகிழச்சி அடிந்துள்ளர்கள்.