முதல்வரின் உருவசிலை கொண்டு கட்டிய கோவில்! எம்எல்ஏ வின் உச்சகட்ட பக்தி!

Photo of author

By Rupa

முதல்வரின் உருவசிலை கொண்டு கட்டிய கோவில்! எம்எல்ஏ வின் உச்சகட்ட பக்தி!

ஆந்திரா மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் விசுவாசி மற்றும் தீவீர பக்தன் என அனைவரும் கூறுபவர் தான் காலஹஸ்தி சட்டமன்ற உறுப்பினர் மதுசூதன் ரெட்டி.இந்த காலத்தில் கடவுளுக்கு பக்தர்களாக இருப்பதை விட அரசியல் தலைவர்களுக்கு பக்தர்களாக இருக்கும் காலம் வந்துவிட்டது.அதுமட்டுமின்றி அவர்களின் தலைவர்களுக்காக எந்தவித எல்லையையும் கடக்க தயாராக உள்ளனர்.

தொண்டர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் தலைவர்களை மகிழ்ச்சியடைய வைக்க போஸ்டர் அடிப்பது,அவர்களை பற்றி புகழந்து பேசுவது மற்றும் கட்டவுட் வைப்பது என்று தான் இருக்கும்.ஆனால் தற்போது ஆந்திரா மாநிலத்தில் எமஎல்ஏ செய்த காரியம் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.ஜெகன் மோகன் ரெட்டி தந்தை ஒய்.எஸ்.ராஜ சேகர் ரெட்டி. அவர் நினைவாக அவரது உருவ சிலையோடு எம்எல்ஏ மதுசூதன் காலஹஸ்தி ஓர் பகுதியில் கோவில் கட்டியுள்ளார்.அந்த கோவிலில் பல புதிய திட்டங்களை அமல்படுத்தியுள்ளார்.

கோவில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு சாப்பாடு சம்பதமான பொருட்களை பிரசாதமாக வழங்குவது தான் வழக்கம்.ஆனால் இவர் கட்டிய இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக ஜெகன் மோகன் ரெட்டி கூறிய திட்டங்களை துண்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.மேலும் இந்த சிலை அமைந்துள்ள இடத்தை ஜெகன் அண்ணா நவரத்தினால நிலையம் என்ற பெயரில் கோவிலை கட்டியுள்ளார்.இந்த கோவில் கட்டுவதற்கு ரூ.2 கோடிவரை செலவளித்துள்ளர்.நவரத்தினம் என ஏன் பெயர் வைத்தீர்கள் என பலர் கேட்டனர்.அதற்கு அந்த எம்எல்ஏ கூறியது,நவரத்தினங்கள் மொத்தம் 9- பது ஆகும்.அதனால் ஜெகன் மோகன் ரெட்டியும் மக்களுக்கு கூறிய வாக்குறிதிகள் மொத்தம் 9-பது,அதனால் அப்பெயர் வைக்கப்பட்டது என்று கூறினார்.

அதுமட்டுமின்றி அந்த கோவில்களில் இதன் சார்பாக 9 தூண்கள் வைக்கப்பட்டுள்ளது.அந்த கோவிலை மிகவும் சிந்தித்து அரசியல் ரீதியான அனைத்து செயல்களையும் உள்ளடக்கி கட்டியுள்ளனர்.மேலும் அங்கு ஓர் காணிக்கை பெட்டி வைத்துள்ளனர்.அந்த பெட்டி மக்கள் காணிக்கை செலுத்துவதற்கு அல்ல.ஏதேனும் உங்கள் தேவைகளை மனுவாக இதில் செலுத்துவதற்கு என கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி ஆந்திரா மாநிலத்தில் விவசாயிகள் படும் துயரத்தை எடுத்து சொல்லும் நோக்கில் விவசாயி ஒருவர் மாட்டுவண்டியில் நெல்மூட்டைகளை தூக்கி செல்வது போல வைக்கப்பட்டுள்ளது.இந்த கோவிலை கண்டு அங்குள்ள மக்கள் அனைவரும் மிகவும் வியப்படைந்துள்ளனர்.