Kallakurichi:தீர்த்தத்தில் விஷம் கலந்து 5 பேரை கொலை செய்ய முயன்ற கோவில் பூசாரி.
கள்ளக்குறிச்சி மாவட்டம் அம்மகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தான் முரளி. இவர் அப்பகுதியில் கணேசன் என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். அதிக கடவுள் நம்பிக்கையில் நாட்டம் கொண்டு இருக்கிறார். மேலும், தன் வசித்து வரும் வீட்டின் அருகில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ஒன்றை கட்டி இருக்கிறார்.
மேலும், அக்கோவிலுக்கு வருபவர்களுக்கு ஜோசியம், குறி, போய் ஓட்டுவது சொல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகிறார். அவருக்கு உதவியாக கணேசன் உறவினராக இருப்பவரின் மகன் ஒருவர் வேலை செய்து வருகிறார். இந்த சூழ் நிலையில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா நடத்துவதற்காக முடிவு செய்து கணேசனிடம் பணத்தை கடனாக வாங்கி திருவிழாவை நடத்தி இருக்கிறார்.
மேலும், கணேசன் தன்னிடம் வாங்கிய கடனை உடனடியாக திரும்ப தர வேண்டும் என்று கேட்டு மிரட்டல் விடுத்து இருக்கிறார். இதில் அச்சம் அடைந்த அவர் கணேசனை கொலை செய்ய முடிவு செய்து இருக்கிறார். சம்பவத்தன்று கணேசனை கோவிலுக்கு சாமி கும்பிட தனது குடும்பத்துடன் வந்து இருக்கிறார். அப்போது, முரளி தீர்த்த நீரில் சானிட்டைசரை கொடுத்து கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினரை குடிக்க சொல்லி தானும் குடித்து இருக்கிறார்.
அதில் தீர்த்தத்தில் சானிட்டர் கலந்து இருப்பதை அறியாமல் குறித்த கணேசன் உட்பட அவரது குடும்பத்தினர் 5 பேர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இருக்கிறார்கள். எனவே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்கள். மேலும், போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.