மீண்டும் ஆளுநருக்கு நேர்ந்த சோதனை !! தமிழ்நாட்டுக்கு எதிரான கவர்னரே  வெளிய போ வைரலாகும் ஹேஷ்டேக்!!

Photo of author

By Jeevitha

மீண்டும் ஆளுநருக்கு நேர்ந்த சோதனை !! தமிழ்நாட்டுக்கு எதிரான கவர்னரே  வெளிய போ வைரலாகும் ஹேஷ்டேக்!!

Jeevitha

The test of the governor again !! Hashtag going viral against Tamilnadu governor go out!!

மீண்டும் ஆளுநருக்கு நேர்ந்த சோதனை !! தமிழ்நாட்டுக்கு எதிரான கவர்னரே  வெளிய போ வைரலாகும் ஹேஷ்டேக்!!

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி இருந்தது வருகிறார். இவரை தற்போது தமிழநாட்டில் இருந்தது வெளிய போ என்ற வாசகம் இணையத்தில் வேகமாக வரவிவருகிறது.

இந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனால்  அவர் அமைச்சர் பதவியில் நீடித்தால் அமலாக்கத்துறை விசாரணை பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதாக ஆளுநர் தெரிவித்தார். இதனை ஒரு அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் சட்டத் துறை வல்லுநர்கள் மற்றும் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி திமுக மூத்த நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். இதில் ஆளுநர் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.  மேலும் ஆளுநர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்ததுள்ளது.

இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மூத்த அதிகாரிகள் பலர் அமைச்சரை பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்து வருகிறார்கள். இந்த அறிக்கை குறித்து ஆளும்கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்பை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் இது குறித்து சமூக வலைத்தளத்தில் ஆளுநரை விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் கவர்னரே வெளியே போ என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது.