திரையரங்குகள் முன்வரவில்லை! நீதிமன்றத்திற்கு தமிழக அரசு பதில்!

0
160
#image_title
திரையரங்குகள் முன்வரவில்லை! நீதிமன்றத்திற்கு தமிழக அரசு பதில்!
தமிழ்நாட்டில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தாலும் திரையரங்குகள் முன்வராத காரணத்தாலும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடவில்லை என்று உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த மே5ம் தேதி தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதல் படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து இந்தியாவில் தமிழகம் உள்பட பல மாநிலங்கிளில் இந்த திரைப்படத்தை வெளியிட தடைகள் விதிக்கப்பட்டது. இருப்பினும் பல தடைகளுக்கு மத்தியிலும் உலக அளவில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிட வேண்டும் என்று பாஜக கட்சி தரப்பில் கூறி வருகின்றனர். படத்தின் தயாரிப்பாளர் விபுல்ஷா அவர்கள் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் காட்சிகள் இரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசு,  “தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு போதிய வரவேற்பு இல்லை. அது மட்டுமில்லாமல் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிடுவதற்கு திரையரங்குகளே முன்வரவில்லை. தமிழக அரசு தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எந்த தடையும் விதிக்கவில்லை” என்று பதில் அளித்துள்ளது.
Previous articleஇந்த எழுத்துக்கள் இனி அரசு வாகனங்களில் இருந்தால் கடும் அபராதம்!! போக்குவரத்து துறை எச்சரிக்கை!!
Next articleமும்பை இந்தியன்ஸ் வீரருக்கு தண்டனை! பதில் அளித்த அணி நிர்வாகம்!!