நம் நாட்டின் உலகம் சுற்றும் வாலிபர் மோடி வெளிநாட்டில் சென்று ஆட்சி வெற்றி பெற செய்த காரியம்!  

0
91
Corona Splinter is Modi! Turbulent Doctors!
Corona Splinter is Modi! Turbulent Doctors!

நம் நாட்டின் உலகம் சுற்றும் வாலிபர் மோடி வெளிநாட்டில் சென்று ஆட்சி வெற்றி பெற செய்த காரியம்!

ஓராண்டு காலமாக மக்கள் கொரோனாவால் பாதித்திருந்த நிலையில் தலைவர் அனைவரும் பாதுகாப்பு கருதி எந்தவித சுற்று பயனத்தையும் மேற்கொள்ள வில்லை.நமது நாட்டில் அதிகம் உலகம் சுற்றும் வாலிபர் நம் பிரதமர் மோடி தான்.ஓராண்டு காலமாக கொரோனாவால் சிறைக்கைதியாக சுற்றுபயணத்தை மேற்கொள்ளாமல் இருந்தார்.

கொரோனா பரவல் குறைந்தும்,அதிகரித்தும் வரும் நிலையில் வங்காள தேசத்திற்கு சிறப்பு விருந்தினாராக சென்றுள்ளார்.பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் தனி நாடக 1971 ஆம் ஆண்டு பிரிந்தது.அது பிரிவதற்கு முக்கிய பங்கு இந்தியாவிற்கு உள்ளது.அதனால் அந்நாட்டின் சுதந்திர பொன்விழாவில் கலந்துக்கொள்ள மோடியை அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா அழைத்துள்ளார்.

அந்த அழைப்பை ஏற்று மோடி 2 நாள் சுற்று பயணமாக நேற்று தனி விமானம் மூலம் தலைநகர் டக்கா விமான நிலையத்திற்கு சென்று இறங்கினார்.அதன்பின் அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா மோடிக்கு மலர்கொத்துக் கொடுத்து வரவேற்றார்.அதனையடுத்து நமது மோடி 1971 ஆம் ஆண்டு வங்காளதேச சுத்திர போரில் உயிரிழிந்த வீரர்களின் நினைவாக எழுப்பப் பட்டுள்ள போர் வீரர்களின் நினைவுச்சின்னத்திற்கு மரியாதை செலுத்தினார்.

அதன்பின் பல்வேறு நிகழ்சிகளில் கலந்துக்கொண்டார்.இரண்டாவது நாளன்று அந்நாட்டில் மிகவும் பிரசித் பெற்ற ஹுல்னா மாகாணம் சட்ஹூரா மாவட்டத்தில் ஈச்வரிப்பூர் பகுதிலுள்ள ஜேஷோரிஸ்வரி காளி கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி பிராத்தனை செய்தார்.அதன்பின் வெளியே வந்து அங்குள்ள செய்தியாளர்களை சந்தித்தார்.அவர்களிடம் கூறியது,இந்த கோவில்சக்தி பீடத்தில் உள்ள காலி அம்மனை வழிபட இன்று எனக்கு வாய்ப்பு அமைந்துள்ளது.நான் காளி அம்மனிடம் கொரோனாவிலிருந்து மக்கள் விடுபட வேண்டுமென்று பிராத்தித்ததாக கூறினார்.

இந்த கோவிலில் காளி அம்மன் மேளா நடைபெறும்.அப்போது இந்தியா மற்றும் வெளி ஊர்களிலிருந்தும் மக்கள் அதிபடியானோர் வருவார்கள் அவர்களுக்கு பயன் தரும் வகையில் ஒரு சமூக நலக்கூடம் அமைக்க தேவை உள்ளது எனக் கூறினார்.அப்போது தான் காலி பூஜை அன்று வருபவர்களுக்கு தங்க வசதியாக இருக்கும் என்றார்.அவர் ஆட்சியில் வெற்றி பெற  அக் காளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தாகவும் கூறப்படுகிறது.