பாஜக கட்சியின் ஆட்சி காலாவதி ஆகும் நேரம் வந்துவிட்டது..!! தெலங்கானா முதலமைச்சர் பேட்டி..!! 

0
394
The time has come for BJP's rule to expire
The time has come for BJP's rule to expire
பாஜக கட்சியின் ஆட்சி காலாவதி ஆகும் நேரம் வந்துவிட்டது..!! தெலங்கானா முதலமைச்சர் பேட்டி..!!
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாஜக கட்சியின் ஆட்சி காலாவதி ஆகும் நேரம் வந்துவிட்டது என்று தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அவர்கள் கூறியுள்ளார்.
தற்பொழுது இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறத் தெடங்கியுள்ள நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகளை ஆதரித்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின். வேட்பாளர்களை ஆதரித்து கர்நாடக மாநிலம் மற்றும் கேரளா மாநிலத்தில் பிரச்சாரம் செய்தார்.
அந்த பிரச்சாரத்தில் தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அவர்கள் “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் இரண்டும் தென் மாநிலங்களில் வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றது. பிரதமர் நரேந்திர மோடி கூறிய உத்தரவாதங்களுக்கு எந்தவொரு உத்தரவாதமும் கிடையாது.
தெலங்கானா மாநிலத்தில் பி.ஆர்.எஸ் வாக்குகளால் பாஜக கட்சி ஆதாயம் பெறும். ஆனால் தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 14 இடங்களையாவது கைப்பற்றும்.
பாஜக கட்சி தென் மாநிலங்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதோடு மட்டுமில்லாமல் தென் மாநிலங்களில் பாகுபாடு காட்டுகின்றது. ஆனால் காங்கிரஸ் கட்சி பாஜக போன்று இல்லை. தென் மாநிலம் உள்பட அனைவரையும் உள்ளடக்கியது தான் காங்கிரஸ் கட்சி.
தென் மாநிலங்களில் உள்ள 130 தொகுதிகளில் பாஜக கட்சியை 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி அடைவதற்கு விட மாட்டோம். 20 இடங்களுக்குள் பாஜக கட்சியை கட்டுப்படுத்தி விடுவோம்.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வட மாநிலங்களில் பாஜக கட்சி வெற்றி பெற்றதை விட தற்பொழுது தேர்தலில் பாஜக கட்சியின் வெற்றி குறையும். ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு மருந்துக்கும் காலாவதி தேதி என்று இருக்கின்றது. அதே போல இந்த தேர்தலில் பாஜக கட்சி தோல்வி அடையும்” என்று கூறியுள்ளார்.