விஜய்சேதுபதி படத்திற்கு ’விஜய்சேதுபதி’ என்றே டைட்டில்!

Photo of author

By CineDesk

விஜய்சேதுபதி படத்திற்கு ’விஜய்சேதுபதி’ என்றே டைட்டில்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’சங்கத்தமிழன்’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாக இருப்பதாக அறிக்கை அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்த படம் தீபாவளி பட்டியலில் இருந்து பின்வாங்கி நவம்பர் மாதம் இரண்டாம் வாரம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் சமீபத்தில் ’சங்கத்தமிழன்’ திரைப்படம் நவம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகள் தொடங்கியது. இந்த நிலையில் இந்தப் படம் வெளியாக இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது

மேலும் ’சங்கத்தமிழன்’ திரைப்படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியிட இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான விஜயா மூவிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து தெலுங்கு டப்பிங் பணிகளும் முடிவடைந்து தற்போது தெலுங்கு படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ’சங்கத்தமிழன்’ படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு ’விஜய் சேதுபதி’ என்றே டைட்டில் வைத்து டைட்டில் போஸ்டரையும் சற்று முன்னர் படக்குழுவினர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்

ஒரு நடிகர் நடிக்கும் திரைப்படத்திற்கு அந்த நடிகரின் பெயரையே டைட்டிலாக வைப்பது என்பது எப்பொழுதாவது நடைபெறும் நிகழ்வு ஆகும். இதற்கு முன்னர் ரஜினிகாந்த் நடித்த ஒரு திரைப்படத்திற்கு ’அன்புள்ள ரஜினிகாந்த்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் மூவிஸ் தயாரிப்பில் விஜய்சேதுபதி, ராஷிகண்ணா, நிவேதா பேத்ராஜ், ஜான்விஜய், சூரி, நாசர் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் விஜய்சேதுபதி உள்பட படக் குழுவினர்களுக்கு திருப்புமுனையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.