இப்படி ஒரு பக்தி தேவையா? வைரலாகும் வீடியோ

0
171

அயோத்தி ராமர் கோவில் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளிவர உள்ளதை அடுத்து, நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த தீர்ப்பை அடுத்து எந்த விதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்
அயோத்தி பகுதியில் வாழும் பெரும்பாலான மக்கள் வேறு பகுதிக்கு தற்காலிகமாக குடியேறி இருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன

https://twitter.com/ExSecular/status/1192405745062440961

இந்த நிலையில் ஒரு தீவிர ராமர் பக்தர் சுமார் 20 அடி நீளத்தில் ஒரு காவி கொடியை கையில் ஏந்தி, பிஸியான சாலையின் நடுவில் நின்று இங்கும் அங்கும் கொடியை ஆட்டிக்கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது

இதனால் அந்த பகுதியில் இரு பக்கமும் செல்லவேண்டிய வாகனங்கள் தடைபட்டு நின்றது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் அந்த ராமர் பக்தருக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பொது மக்களை தொந்தரவு செய்யும் அளவுக்கு பக்தி முற்றிப் போய் இருப்பது பக்தியையே கேலி செய்வதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Previous articleமுக ஸ்டாலினுக்கு அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறிய நன்றி!
Next articleபஞ்சமி நிலம் பற்றிய விவாதம் ஆரம்பித்ததும் பட்டாவை காட்டிய ஸ்டாலின் மூலப்பத்திரத்தை காட்ட மட்டும் மருத்துவர்களை பதவி விலக கேட்பது ஏன்?