நடிகர் சத்யராஜ் அவர்களின் வீட்டில் ஏற்பட்ட சோகம்… பலரும் இரங்கல் தெராவித்து வருகின்றனர்!!

Photo of author

By Sakthi

நடிகர் சத்யராஜ் அவர்களின் வீட்டில் ஏற்பட்ட சோகம்… பலரும் இரங்கல் தெராவித்து வருகின்றனர்…

 

பிரபல நடிகர் சத்யராஜ் அவர்களின் தாயார் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் சத்யராஜ் அவர்களின் தாயார் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சத்யராஜ். இவர் ஹீரோ, வில்லன், தந்தை என்று பல வேடங்களில் நடித்து பிரபலமடைந்தவர். இவர் தற்பொழுது ஹைதராபாத்தில் படம் ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் வசித்து வந்த நடிகர் சத்யராஜ் அவர்களின் தாயார் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். தனது(சத்யராஜ்) தாயார் மறைவு செய்தி அறிந்த நடிகர் சத்யராஜ் அவர்கள் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு ஹைதராபாத்தில் இருந்து தனது தாய் வீட்டுள்ள கோவை மாவட்டத்திற்கு வந்தார்.

 

நடிகர் சத்யராஜ் அவர்களின் தாயார் நாதாம்பாள் அவர்களுக்கு 94 வயது ஆகின்றது. தாயார் நாதாம்பாள் அவர்களுக்கு சத்யராஜ் தவிர கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி என்று இரண்டு மகள்களும் உள்ளனர். சத்யராஜ் அவர்களின் தாயார் நாதாம்பாள் அவர்களின் இறுதி ஊர்வலம் சொந்த ஊரான கோவையில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.