நண்பனை நம்பி வீட்டில் விட்டு சென்றதால் ஏற்பட்ட விபரீதம்!

Photo of author

By Hasini

நண்பனை நம்பி வீட்டில் விட்டு சென்றதால் ஏற்பட்ட விபரீதம்!

Hasini

The tragedy of leaving home relying on a friend!

நண்பனை நம்பி வீட்டில் விட்டு சென்றதால் ஏற்பட்ட விபரீதம்!

யாரை நம்பினாலும் நம்பா விட்டாலும் நண்பனை கண்ணை மூடிக்கொண்டு நம்பலாம் என்பார்கள், ஆனால் தற்போது அதையும் நம்ப கூடாது என்ற நிலை ஏற்பட்டு விடும் போல உள்ளது.

கடற்படையை சேர்ந்த ஊழியர் ஒருவர் தன் மனைவியுடன், மும்பை கொலபா பகுதியில் வசித்து வருகிறார்.இவர்களுடன் கடற்படை ஊழியரின் 30 வயது திருமணமாகாத நண்பர் ஒருவரும் இருந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று கடற்படை ஊழியர் ஒரு பயிற்சிக்காக கேரளா சென்றிருந்த நிலையில் அவரது மனைவியும், அந்த நண்பர் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர்.

அன்று போதையில் இருந்த அந்த நபர் அந்த துப்பாக்கி முனையில் மிரட்டி கற்பழித்துள்ளார்.மேலும் இதை கணவனிடம் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார்.

இதன் காரணமாக அந்த பெண் தன் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.இது தொடர்பாக கணவன் விசாரித்த போது நடந்த சம்பவத்தை கூறி கதறியுள்ளார்

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கடற்படை ஊழியர் போலீசில் புகார் தெரிவித்தார்.அதனை தொடர்ந்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.