இருளர் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! ஜெய்பீம் படத்திற்க்காக பொங்கிய புரட்சியாளர்கள் இப்போ எங்கே? என விமர்சனம்
விழுப்புரம் மாவட்டத்தில் கணவரின் இறப்பு சான்றிதழை பெற சென்ற இருளர் பெண்ணுக்கு நடந்த சோக நிகழ்வானது தமிழகம் முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இந்நிலையில் இதை கண்டிக்கும் சமூக ஆர்வலர்கள் ஜெய் பீம் படத்துடன் தொடர்பு படுத்தி விமர்சித்து வருகின்றனர்.இது ஆளும் தரப்புக்கும் ஜெய் பீம் படக்குழுவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய் பீம் திரைப்படம் வெளியான போது அதில் நடித்த நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் உள்ளிட்டோரை தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டினர். அந்த வகையில் குறவர் மற்றும் இருளர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த போவதாகவும் ஆளும் தரப்பில் பேசப்பட்டது. அதையடுத்து முதல்வர் இருளர் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரின் வீட்டுக்கே சென்று உணவருந்தும் சம்பவமும் நடைபெற்றது.நாளடைவில் அதே பெண் ஆளும் திமுக தனக்கு அளித்திருந்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என விமர்சனம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இருளர் சமூக பெண்ணுக்கு நடந்த சம்பவமானது ஆளும் தரப்புக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.விக்கிரவாண்டி தாலுகாவில் நல்லாபாளையம் பகுதியில் சங்கீதா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு இவரின் கணவர் ஐய்யனார் இறந்துவிட்டார். இவர்களுக்கு கமலேஷ் என்ற 11 வயது மகன் உள்ளார்.
இந்நிலையில் கணவரின் இறப்பு சான்றிதழை பெற அங்குள்ள விஏஓ அலுவலகத்துக்கு அவர் சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு கிராம நிர்வாக அலுவலராக பதவி வகித்து வந்த ஆரோக்கியதாஸ் என்பவரிடம் இதற்கான மனுவை கொடுத்துள்ளார்.அப்போது கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸ் இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சமாக 5000 ரூபாய் கேட்டுள்ளார்.
இறப்பு சான்றிதழுக்கு லஞ்சம் கேட்டதை பார்த்து அதிர்ந்த சங்கீதா தன்னிடம் அவ்வளவு பணமெல்லாம் இல்லையென்று கூறிவிட்டு அவர் வைத்திருந்த 1000 ரூபாய் பணத்தை மட்டும் கொடுத்துள்ளார். இந்த பணத்தை வாங்கிக் கொண்ட ஆரோக்கியதாஸ் சங்கீதாவுக்கு இரவு நேரங்களில் சம்பந்தமில்லாமல் போன் செய்து ஆபாசமாக பேச ஆரம்பித்துள்ளார்.
இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட சங்கீதா லஞ்ச பணம் குறைவாக கொடுத்ததால் தான் இப்படி பேசுவதாக நினைத்து மீதமுள்ள தொகையில் ல் தான் இப்படி பேசுவதாக நினைத்து மீதமுள்ள தொகையில் 3000 ரூபாயை கொடுத்துள்ளார். இதன் பிறகு தான் ஆரோக்கியதாஸ் அவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளார்.
இதன் பின்னர் மகளிர் உதவித்தொகை வேண்டி சங்கீதா விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் அவரின் பெயரை பார்த்ததுமே ஆரோக்கியதாஸ் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார், இது குறித்து சங்கீதா அவரிடம் கேட்டதற்கு தன்னுடைய பாலியல் இச்சைக்கு ஒத்துழைத்தால் மட்டுமே விண்ணப்பம் ஏற்கப்படும் என கூறியுள்ளார்.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த சங்கீதா அவரின் உறவினர்கள் 50 பேருடன் சேர்ந்து விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.இத்துடன் அவர் செல்போனில் ஆபாசமாக பேசிய ஆடியோ ஆதாரத்தையும் வழங்கியுள்ளார்.ஆளும் திமுக அரசு தரப்பில் இருளர் சமூக மக்களுகாக பாடுபடுவோம் என்று உறுதியளித்திருந்த நிலையில் அவர்களின் ஆட்சியில் அச்சமூகத்தை சேர்ந்த பெண்ணுக்கு அரசு அதிகாரியால் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தமிழக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சங்கீதா அளித்த புகாரின் பேரில் ஆரோக்கியதாஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோட்டாட்சியர் காஜாசாகுல்அமீது கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ஜெய்பீம் படத்திற்க்காக பொங்கிய புரட்சியாளர்கள் இப்போ எங்கே? என சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.