செல்போனால் வந்த விபரீதம்!! ஒரே கயிற்றில் தந்தை மகன் தற்கொலை!
இந்த காலகட்டத்தில் சிறுவயது முதல் பெரியவர்கள் வரை செல்போனிற்கு அடிமையாகி உள்ளனர். குறிப்பாக பள்ளி படிக்கும் மாணவர்கள் பல விளையாட்டுகளால் செல்போனிற்கு அடிமையாகி இருக்கின்றனர். இவ்வாறு செல்போனில் மூழ்கி இருக்கும் பிள்ளைகளை கண்டித்தால், அதை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தற்பொழுது உள்ள மாணவர்களின் மனநிலை தள்ளப்பட்டு விட்டது. அந்த வகையில் தான் குன்றத்தூர் அடுத்த பழதண்டலம் என்ற பகுதியில் சுந்தர் மற்றும் அவரது மனைவி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தினேஷ் குமார் நவீன் குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் நவீன் குமார் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் முழு நேரமும் செல்போனில் கேம் விளையாடுவதையே வழக்கமாக வைத்துள்ளார். இவ்வாறு செல்போனை உபயோகம் செய்து கொண்டிருந்தால், எப்படி படிக்க முடியும் என்று எண்ணி அவரது தந்தை நவீன்குமாரை திட்டி உள்ளார். அப்பா திட்டியதை தாங்க முடியாமல் நவீன் குமார் யாருமில்லாத நேரம் பார்த்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வந்த பார்த்த அவரது தந்தைக்கு மகன் தூக்கிட்டு கொண்டது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
தனது மகன் என்னால்தான் உயிரிழந்து விட்டான் என்ற சோகத்தில் நவீன்குமார் தந்தை இருந்துள்ளார். இந்த துக்கம் நாளடைவில் இவரையும் தற்கொலைக்கு தூண்டி உள்ளது. கையை அறுத்துக் கொண்டும் அவரது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதே கயிற்றில் இவரும் தூக்கிட்டு கொண்டார். மகன் இறந்து சில நாட்கள் கூட ஆகாத நிலையில் துக்கம் தாங்க முடியாமல் தந்தையும் உயிரிழந்தது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.