மாஸாக இருக்கும் மாமன்னன் படத்தின் டிரெய்லர்! நிச்சியமாக ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது!!
நடிகர் உதய்நிதி ஸ்டாலின் அவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று அதாவது ஜூன் 16ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது.
நடிகர் உதய்நிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் வடிவேலு, நடிகர் பகத் பாசில், நடிகர் லால், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முககிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப் புயல் ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் இசையமைத்துள்ள மாமன்னன் திரைப்படத்தை ரெட்ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த டிரெய்லரில் வரும் சட்டசபை காட்சியில் சங்கரன்கோவில் சட்டசபை உறுப்பினர் ஈ.ராஜா அவர்களும் நடித்துள்ளார். இந்த டிரெய்லரை பார்க்கும் பொழுது நிச்சயம் ஏதோ ஒரு தாக்கத்தை மாமன்னன் திரைப்படம் ஏற்படுத்தும் என்று தெரிகின்றது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இதற்கு முன்னர் இயக்கிய கர்ணன், பரியேறும் பெருமாள் ஆகிய திரைப்படங்களிலும் சமூக கருத்துக்களை கூறியிருந்தார். அதைப் போலவே மாமன்னன் படத்திலும் தற்போதைய காலகட்டத்திற்கான சமூக கருத்து உள்ளது என்று இந்த டிரெய்லரை பார்க்கும் பொழுது தெரிகின்றது.
மாமன்னன் திரைப்படத்தின் டிரெய்லரை படத்தின் தயாரிப்பாளரும் படத்தின் கதாநாயகனுமான நடிகர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர் பதிவிட்டுள்ள டுவீட்டில் “வீண் மாயை வேரறுக்க மானுடத்தின் திசை திறக்க வருகிறான்
மாமன்னன்” என்று பதிவிட்டு டிரெய்லரை வெளியிட்டார். இந்த டிரெய்லர் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.