முதன்முறையாக ரசிகர்கள் வெளியிட்டுள்ள தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரின் டிரைலர்!

Photo of author

By Parthipan K

முதன்முறையாக ரசிகர்கள் வெளியிட்டுள்ள தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரின் டிரைலர்!

தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் மாறன். இந்த படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தனுஷ் இந்த படத்தில் பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கார்த்திக் நரேன் இயக்கியுள்ள “மாறன்” படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

தற்போது ‘மாறன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுடைய ஃபர்ஸ்ட் லுக், டிரெய்லர் போன்றவை பெரும்பாலும் பிரபலங்களாலும், தயாரிப்பாளர்களாலும்தான்  வெளியிடப்படும்,

ஆனால் முதல் முறையாக தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘மாறன்’ திரைப்படத்தின் டிரெய்லரை, டிவிட்டர் தளத்தின் புதிய வசதியை பயன்படுத்தி ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களிடமும் இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதன்மூலம், இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்திய முதல் படமாக ‘மாறன்’ திரைப்படம் சாதனை படைத்துள்ளது. தற்போது ‘மாறன்’ படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த ட்ரைலர் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை மேலும், அதிகமாக்கி உள்ளது. பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ள ‘மாறன்’ திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிற மார்ச் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது.