‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டிரைலர் இந்த தேதியில் வெளியாகும்: – படக்குழு!

Photo of author

By Parthipan K

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டிரைலர் இந்த தேதியில் வெளியாகும்: – படக்குழு!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். டி.இமான் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பிப்ரவரி 4ஆம் தேதியே படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த சமயத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக பட வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டது.

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்து வெற்றி பெற்ற படங்களான ‘சூரரை போற்று’ மற்றும் ‘ஜெய் பீம்’ ஆகிய படங்கள் நேரடியாக ஒ.டி.டி தளத்தில் வெளியாகின. இந்த நிலையில், நீண்ட காலத்திற்கு பிறகு சூர்யாவின் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாலும், மற்றும் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதன் காரணத்தாலும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில், படத்தின் டிரைலர் குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 2ஆம் தேதி காலை 11 மணி அளவில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டிரைலர் வெளியிடப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.