irctc booking: ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு இணையதளம் முடங்கி உள்ளது.
இந்தியாவில் பொது மக்கள் பயணத்திற்கு அரசு சார்பில் பேருந்துகள், ரயில்வே மற்றும் விமானம் போன்ற சேவைகள் உள்ளது. குறிப்பாக இந்திய மக்கள் மிகவும் அதிகமாக போக்குவரத்துக்கு பயன்படுத்தக்கூடியதாக ரயில்வே துறை இருக்கிறது. இது இன்றளவும் தனியார் மயமாக்கப்படும் இருக்கிறது. ஆனால் மற்ற பிற போக்குவரத்து துறைகளும் தனியார் கட்டுப்பாட்டில் உள்ளது.
பொது மக்கள் அதிகம் ரயிலில் பயணம் செய்ய விரும்ப காரணம் குறைந்த கட்டணத்தில் அதிக வசதிகள் இருக்கிறது என்பதனாலும், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு செல்ல ஏதுவாக இந்த சேவை இருப்பதாலும் அதிக மக்கள் பயன்படுத்துகிறார்கள். ரயில் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவை இணையத்தின் வாயிலாக மக்களின் செய்து வருகிறார்கள். குறிப்பாக ஐஆர்சிடிசி என இணைய வசதியை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த இணையதளம் உணவு ஆடர் செய்வது மற்றும் பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த இணைய தளத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு ரயில் பயணிகளை சிரமத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த குறைபாடு தொடர்பாக ஐஆர்சிடிசி இரண்டு வாரங்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரி செய்யப்படும் என கூறப்பட்டது.
கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் விடுமுறை நாட்கள் என்பதால் பொதுமக்கள் அதிக அளவில் ரயிலில் பயணம் செய்ய தட்கல் முறையில் முன்பதிவு செய்து வருகிறார்கள். அதிக அளவில் மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருவதால் இந்த சேவை இன்று காலை 10 மணி அளவில் மீண்டும் முடங்கி இருக்கிறது. எனவே பொது மக்கள் நேரில் வந்து ரயில் பயன் முன் பதிவு செய்ய வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.