10,20 ரூபாய் நாணயங்கள் குறித்து நடத்துனர்களுக்கு புது அறிவிப்பு வெளியிட்ட போக்குவரத்து கழகம்..!

Photo of author

By Janani

10,20 ரூபாய் நாணயங்கள் குறித்து நடத்துனர்களுக்கு புது அறிவிப்பு வெளியிட்ட போக்குவரத்து கழகம்..!

Janani

ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் 10 ரூபாய் நாணயங்களை அறிமுகப்படுத்தியது. ஆனால், அந்த 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதற்கு பொதுமக்களிடையே தயக்கம் உள்ளநிலையில், 20 ரூபாய் நாணயங்களையுன் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தி புழகத்திற்கு விட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் 10, 20 ரூபாய் நாணயங்கள் செல்லாது என அவ்வபோது வதந்திகள் பரவி வருகின்றன. பல முறை ரிசர்வ் வங்கி இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மக்களிடம் பல இடங்களில் 10, 20 ரூபாய் நாணயங்களை வாங்குவதற்கான தயக்கம் இருந்துகொண்டே தான் உள்ளது.

இந்நிலையில், சென்னை தவிர பல இடங்களில் பேருந்துகளின் நாணயங்களை வாங்க வில்லை என குற்றசாட்டு எழுந்த நிலையில், போக்குவரத்து கழகம் நடத்துனர்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், நடத்துனர்கள் 10, 20 ரூபாய் நாணயங்களை மறுக்காமல் பெற்று கொண்டு பயண சீட்டு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை மீறினால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.