அரசு பேருந்துகளை இயக்க முடியாமல் தவிக்கும் போக்குவரத்து கழகம்! காரணம் என்ன பொதுமக்கள் கேள்வி?
அதிமுக தேர்தல் வாக்குறுதியாக அரசு பேருந்துகளில் மகளிர்களுக்கு கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்த நிலையில் தற்போது நடைமுறையில் உள்ளது. பெருமாள் கிராம போக்குவரத்து அரசு டவுன் பஸ் கலை நம்பி உள்ளன அரசு போக்குவரத்து கழகம் ஆட்கள் பற்றாக்குறை உடன் உள்ளதால் கொண்டகை காரியாபட்டி, சோழவந்தான் அலங்காநல்லூர் ,மேலூர், சேடப்பட்டி போன்ற பல்வேறு பகுதி கிராமங்களுக்கு பேருந்து சேவை பாதிப்படைந்துள்ளது.
மேலும் ஒவ்வொரு டெப்போவிலும் டிரைவர் கண்டக்டர் 150 பணியில் இருப்பார்கள் ஆனால் தற்சமயம் டெப்போக்களில் அமைத்து பணி உட்பட பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. மேலும் இதுமட்டும்மால்லாமல் கட்சி செல்வாக்கை பயன்படுத்தி டிரைவர்கள், கண்டக்டர்களை நியமிக்ப் படுகின்றர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது.
மேலும் பேருந்தை இயக்க தொழில்நுட்ப ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது மேலும் உதிரி பாகங்களை வாங்க இயலாத அளவுக்கு நிதி நிர்வாகம் உள்ளதால் பல பேருந்துகள் இயக்க தகுதியற்றதாகிறது ஊழியர்கள் பலருக்கு விடுப்பு கொடுத்து அனுப்பி விடுவதால் கிராமப்புறங்களில் செல்லும் பேருந்துகளுக்கு மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் நடத்துனர் பற்றாக்குறையால் டிப்போக்கு 10 முதல் 20 பேருந்துகள் வரை இயக்காமல் உள்ளது.
மேலும் தினம் 20 ஓட்டுநர்களை கட்டாயம் விடுப்பு எடுக்க சொல்கின்றனர் அதே சமயம் தொழிலாளர்கள் சொந்த ஒப்பந்த கோரிக்கைக்காக போராடச் சென்றால் விடுப்பு என்று அறிவித்து விடுகிறார்கள் என்றும் அதிகாரியிடம் கேட்டபோது பொதுவாக எல்லா பேருந்துகளும் இயக்கப்படுகின்றன கண்டக்டர் பட்டா குறை இருப்பது உண்மைதான் ஆனால் இதற்காக காலை பணிக்கு வருவோர் மதியம் ஓவர் டைம் ஆக பணியாற்றுகையில் ஓரிரு பேருந்து சேவை பாதிக்கிறது என்று கூறினார்கள்.