பல்கலைகழகம் வெளியிட்ட அசத்தல் திட்டம்! மாணவிகளுக்கு மாதவிலக்கு நாட்களில் விடுமுறை!
கடந்த பத்து ஆண்டுகளாக மாதவிடாய் காலத்தில் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கவும்,பள்ளி மற்றும் மாணவிகளுக்கு வருகை பதிவேட்டின் விடுப்பும் அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகின்றது.ஆனாலும் இந்தியாவில் ஒரு சில அலுவலகங்கள் மட்டுமே இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றது.மேலும் ஓரிரு கல்வி நிறுவனங்கள் மட்டுமே இந்த மாதவிடாய் கால விடுமுறைக்கு அனுமதி அளித்துள்ளது.
கேரளாவில் உள்ள கொச்சி பல்கலைக்கழத்தில் பயிலும் மாணவிகள் மாதத்தில் மாதவிலக்கு நாட்களில் கல்லூரிக்கு விடுப்பு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதனை போல கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் மாணவிகள் மாதவிலக்கு நாட்களில் வகுப்புக்கு விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொச்சி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகள் ஒவ்வொரு பருவத்திலும் 75 சதவீதம் வருகை பதிவு கொண்டிருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கபடுவார்கள்.மாணவிகளுக்கு மாதவிலக்கு விடுமுறை அறிவிக்கபட்டதின் காரணமாக வருகை பதிவு 73 சதவீதம் கொண்டிருந்தாலே தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து கேரள தொழில் நுட்ப பல்கலை கழகத்திலும் மாணவிகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டதை கேரள உயர் கல்வி துறை மந்திரி பிந்து இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார்.அதுமட்டுமின்றி கேரளாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என அனைவரும் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.