தீ வைத்து கொளுத்தப்பட்ட உன்னாவ் இளம்பெண் மரணம்: பெரும் பரபரப்பு
ஒரு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்வது மட்டுமன்றி உயிரோடு கொளுத்துவது என்பது குற்றவாளிகளுக்கு சாதாரணமாகிவிட்டது. போலீசில் சிக்க மாட்டோம் என்றும் அப்படியே சிக்கினாலும் பல வருடங்கள் வழக்குகள் நடந்து இறுதியில் காரணம் கருணை மனுபோட்டு தப்பித்து விடலாம் என்ற தைரியம் தான் இவ்வாறு குற்றம் செய்வதற்கு காரணம் என்று சமூக வலைதள பயனாளர்கள் தெரிவித்து வருகின்றனர்
ஒரு குற்றவாளியின் குற்றம் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அந்த குற்றவாளிக்கு தண்டனை கிடைக்கவேண்டும் என்றும் அவ்வாறு தண்டனை அளித்தால் மட்டுமே குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது என்றும் தாமதம் ஆகும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்றும் சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாலியல் பலாத்காரம் செய்த 2 கொடூரர்கள் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்து அதே பெண்ணை பெட்ரோல் ஊத்தி கொளுத்தி உள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று, சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்
இந்த குற்றவாளிகளை ஜாமீனில் விடாமல் இருந்திருந்தால் அந்த பெண் தற்போது உயிருடன் இருந்திருப்பார். இவ்வாறான கொடூர குற்றவாளிகளை ஜாமீனில் எப்படி விட்டார்கள் என்ற கேள்வி தான் தற்போது எழுகிறது. இதுபோன்ற குற்றங்கள் தொடர்ச்சியாக நடக்கும் போது என்கவுண்டர் தேவைதான் என்ற எண்ணம் பொதுமக்களின் மனதில் எழுகிறது. இதனை நீதிமன்றமும் சட்ட வல்லுநர்களும் தான் தவிர்த்த வழிவகை செய்யவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது