பெட்ரோல் தீர்ந்து போனதால் வாகனத்திற்கு தீ!! உரிமையாளரின் விசித்திர செயல்!!
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(39). இவர்
சேலம் டவுனில் உள்ள மதுபானகடையில் மது குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் தனது இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு ஓட்டி சென்றார்.கருங்கல்பட்டி பகுதியில் மணிகண்டன் சென்று கொண்டிருந்தபோது பெட்ரோல் இல்லாததால் இரண்டு சக்கர வாகனம் நின்றுவிட்டது. பலமுறை தனது இருசக்கர வாகனத்தை மணிகண்டன் இயக்கி பார்த்தும் பைக் ஸ்டார்ட் ஆகாததால் கோபமடைந்த மணிகண்டன் தீப்பெட்டியை எடுத்து பெட்ரோல் டேங்க் மூடியை திறந்து இரண்டு சக்கர வாகனத்திற்கு தீ வைத்துவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டார்.
இதனால் கருங்கல்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக தீயை அணைத்தனர்.இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த காட்சியில் வாகனத்தில் அமர்ந்தவாறு இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்து பார்க்கிறார்.
பெட்ரோல் இல்லாததால் இருசக்கர வாகனம் ஸ்டார்ட் ஆகாததால் ஆத்திரமடைந்து பெட்ரோல் டேங்க் மூடியை திறந்து நெருப்பை பற்ற வைத்துவிட்டு நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
மேலும் செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.